ஷா ஆலம், செப்டம்பர் 18:
சிலாங்கூரில் கொல்லை புறமாக ஆட்சியைக் கவிழும் என்ற செய்தியில் உண்மையில்லை என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி தெரிவித்தார். சிலாங்கூரில் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமைத்துவத்தின் மீது சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

" நாம் அனைவரும் ஒன்றிணைந்து கெஅடிலான் போராட்டத்தில் தொடர்ந்து இருப்போம். எது நடந்தாலும், நாம் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் போராட்டத்தில் தொடர்ந்து இருப்போம். சிலாங்கூர் மாநிலத்தில் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை," என்று அந்தாரா போஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு கெஅடிலான் சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப் உடன் அம்னோவில் சேர்ந்து விட்டதாக தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுஹாய்மி ஷாபியி, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்க நடந்த கபட நாடகமே இது என்று வர்ணித்தார்.
" இந்த நடவடிக்கை மக்களின் கவனத்தை திசை திருப்ப நடந்த முயற்சி ஆகும். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்க நஜிப் எடுத்த முயற்சி," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
#கேஜிஎஸ்


