ECONOMY

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாடு வருகையாளர்களை கவர்ந்தது

14 செப்டெம்பர் 2017, 11:28 AM
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாடு வருகையாளர்களை கவர்ந்தது
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாடு வருகையாளர்களை கவர்ந்தது

ஷா ஆலம், செப்டம்பர் 14:

5000 மேற்பட்ட வருகையாளர்கள் சிலாங்கூர் விவேக நகரம் மற்றும் எதிர்கால வாணிப மாநாட்டில் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 3000 பேர்கள் இரண்டு நாள் மாநாட்டில் நடந்த விவாதத்தில் பங்கேற்றனர் என்று சிலாங்கூர் மாநில முதலீடு, தொழிற்துறை, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். இந்த மாநாடு ஒரு சிறந்த கல்வி கற்கும் தளமாக அமைந்த வேளையில் 60 பேச்சாளர்களை களம் இறக்கியது என்றார். இதையடுத்து, சிலாங்கூர்-ஆசியான் வர்த்தக மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர்.

"  அனைத்து பேச்சாளர்களும் தங்களின் வெற்றிக் கதைகள் மற்றும் ஆசியான் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். தொழில் முனைவர்கள் வெற்றி ரகசியங்களையும் வியாபார யுக்திகளையும் பார்வையாளர்களுடன் விவாதித்தனர்.

CP2A1367-1024x683

 

 

 

 

 

டத்தோ தேங் சாங் கிம் சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி 2017 அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த கண்காட்சி செதியா சிட்டி பல்நோக்கு மையத்தில் நடைபெற்றது. அதிகாரப்பூர்வ தொடக்க விழாவை மேன்மை தங்கிய சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா பூர்த்தி செய்து வைத்தார். அவரோடு இன்வெஸ்ட் சிலாங்கூரின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹாசன் அஸாரி இட்ரிஸ் உடன் இருந்தார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.