RENCANA PILIHAN

தாப்பீஃஸ் மையம் தீக்கிரை, 20-க்கும் மேற்பட்டோர் மரணம்

14 செப்டெம்பர் 2017, 2:11 AM
தாப்பீஃஸ் மையம் தீக்கிரை, 20-க்கும் மேற்பட்டோர் மரணம்

கோலா லம்பூர், செப்டம்பர் 14:

இன்று அதிகாலை டத்தோ கெராமாட், கெராமாட் ஹூஜோங் சாலையில் அமைந்துள்ள தாப்பீஃஸ் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மேற்பட்ட மாணவர்கள் மரணமடைந்தனர்.

பிஎச் ஓன்லைன் வெளியிட்ட செய்தியில், மேற்கண்ட மையத்தின் முதல் மாடியில் தீப்பற்றி எரிந்த போது பெரும்பாலான மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த விபத்து ஏறக்குறைய காலை மணி 5.15-க்கு நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் 20 மாணவர்கள் இரண்டாவது மாடியில் இருந்து, ஜன்னல் வழியாக எட்டிக் குதித்து தப்பித்தனர். மற்றவர்கள் தப்பிக்க முடியாமல் கதவின் முன்பு மாட்டிக்கொண்டு இறக்க காணப்பட்டனர். இதுவரை தீ விபத்தில் இறந்தவர்களின் உடல் அங்கே இருப்பதாகவும், தீ ஏற்பட்ட காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

இதனிடையே, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீமுகமட் அஸ்மின் அலி தனது டிவிட்டரில் சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவை கூட்டரசு பிரதேச இஸ்லாமிய இலாகாவிடம் இருந்து முழுமையான விவரங்களை பெறுமாறு பணித்தார்.

* சற்று முன்பு, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.