SUKANKINI

மலேசிய கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கில் நடைபெறும்

13 செப்டெம்பர் 2017, 3:32 AM
மலேசிய கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கில் நடைபெறும்
மலேசிய கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கில் நடைபெறும்

ஷா ஆலம், செப்டம்பர் 13:

எதிர் வரும் நவம்பர் 4-இல் நடைபெற உள்ள மலேசிய கிண்ண இறுதி ஆட்டம் ஷா ஆலம் அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளதாக மலேசிய கால்பந்து ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளார்கள். இதற்கு முன்பு மலேசிய லீக், இளையோர் ஹாரிமாவ் அணியினர் சீ விளையாட்டு கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வகையில் தள்ளிப்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"   இதனிடையே, எதிர் வரும் நவம்பர் மாதத்தில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் மற்ற போட்டிகளுக்கு பயன்படுத்த இருப்பதால் இறுதி ஆட்டம் அங்கு நடத்த முடியாது," என்று அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

STADIUM SHAH ALAM

 

 

 

 

 

ஷா ஆலம் அரங்கில் 80,000 கால்பந்து ரசிகர்கள் கண்டு களிக்க முடியும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரங்கம் இது ஆகும். இந்த அரங்கம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் 'கௌ கிராஸ்' புல் நடும் வேலைகளும் நடக்க இருப்பதால் மூடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.