SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் சின்னம்: அரசாங்கமும் மக்களும் இணைந்து இலக்கை அடைய முடியும்

9 செப்டெம்பர் 2017, 3:37 AM
ஸ்மார்ட் சிலாங்கூர் சின்னம்: அரசாங்கமும் மக்களும் இணைந்து இலக்கை அடைய முடியும்
ஸ்மார்ட் சிலாங்கூர் சின்னம்: அரசாங்கமும் மக்களும் இணைந்து இலக்கை அடைய முடியும்

ஷா ஆலம், செப்டம்பர் 9:

'விவேக சிலாங்கூர்' அல்லது ஸ்மார்ட் சிலாங்கூரின் புதிய சின்னம் மாநில அரசாங்கம் மற்றும் பொது மக்களும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் எதிர் கால சந்ததியினரை உருவாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட வழி வகுக்கும் என ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாடுகள் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் ஃபாமி ஙா கூறினார். இந்த வடிவமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 26 மாணவர்கள் பங்கேற்ற சின்னம் வடிவமைக்கும் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டதாகும்.

ஆசியா பசிபிக் பல்கலைக் கழக மாணவரான விண்ணி தான் ஜியா கைவண்ணத்தில் உருவான இந்த சின்னம் இளையோர் எண்ணங்களின் வெளிப்பாடு கண்கூடாக தெரிகிறது. எதிர் காலத்தில் சிலாங்கூர் விவேக நகரமாக உருமாற்றம் பெற இளையோர் தொழில் நுட்ப திறன் மிக்க சந்ததியினராக மேம்பாடு அடைவது காலத்தின் கட்டாயம் என்று இது உணர்த்துகிறது.

 

Smart_Selangor Logo

 

 

 

"  டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தானே இந்த சின்னத்தை தேர்ந்தெடுத்தார். சிலாங்கூரில் 40% இளையோர் ஸ்மார்ட் சிலாங்கூர் மேம்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வருவதால் நாங்கள் சின்னத்தை உருவாக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விட்டோம். 2025-க்குள் சிலாங்கூரை விவேக நகரமாக உருமாற்றம் பெற சிறந்த சிந்தனை வளம் கொண்ட இளையோர் தேவைப் படுகிறது," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதனிடையே, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது அகப்பக்கத்தில் புதிய சின்னத்தை கண்டு பெருமிதம் கொண்டதாக பதிவு செய்தார். இது சிலாங்கூரை ஆசியானில் 2025-க்குள் பிரசித்தி பெற்ற விவேக மாநிலமாக உருமாற்றம் பெற வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.