MEDIA STATEMENT

14-வது பொதுத் தேர்தலையொட்டி பாக்காத்தான் சிலாங்கூரில் பலத்தை கூட்டியுள்ளது

8 செப்டெம்பர் 2017, 6:45 AM
14-வது பொதுத் தேர்தலையொட்டி பாக்காத்தான் சிலாங்கூரில் பலத்தை கூட்டியுள்ளது

இன்று காலை நான் சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை கூட்டத்திற்கு தலைமையேற்றேன். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான ஜசெகவின் தோனி புவா, அமானாவை சேர்ந்த இஸாம் ஹாஷிம் மற்றும் பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ அப்துல் ரஷீத் அஸாரி ஆகியோர் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் 14-வது பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை தரும் என்று நம்புகிறேன்.

இன்றைய முதல் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில அமைப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளது. நான்கு உறுப்புக் கட்சிகளின் பங்களிப்பு மட்டுமில்லாமல் மூவினத்தை சேர்ந்த தலைவர்களும் தலைமைத்துவத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மாநில தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் வெற்றிக் கதைகள் மக்களுக்கு சென்றடைய பிரச்சார கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது.

சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைத்துவம் வலுப்படுத்தி மாநில அரசாங்கத்தை தற்காக்கவும் மாநில மக்களின் நலனுக்காகவும் போராட உறுதி கூறுகிறேன்.

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி

சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்

Pakatan Harapan Negeri Selangor

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.