SELANGOR

மற்ற மாநில மக்கள், ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையைக் கண்டு பொறாமை

7 செப்டெம்பர் 2017, 4:24 AM
மற்ற மாநில மக்கள், ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையைக் கண்டு பொறாமை
மற்ற மாநில மக்கள், ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையைக் கண்டு பொறாமை
மற்ற மாநில மக்கள், ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையைக் கண்டு பொறாமை

ஷா ஆலம், செப்டம்பர் 7:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களை (ஐபிஆர்) சிலாங்கூர் வாழ் மக்கள் மட்டுமில்லாமல், வேறு மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வாழும் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவை வேற்று மாநில மக்கள் பொறாமைப்படும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலங்களில் ஏற்படுத்தி இருக்கும் பொது போக்குவரத்து சேவைகளை ஒப்பிடும் போது சிலாங்கூர் அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமாக காணப்படுகிறது.

அதில் பயணிகளில் ஒருவரான மாணவி திவ்யா, மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு வருகிறது சிலாங்கூர் மாநில அரசாங்கம் என்று புகழ்ந்தார்.

NETIZEN

 

 

 

"  சிலாங்கூர் அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள். நான் சிலாங்கூர் மாநிலத்தில் பிறக்கவில்லை. ஆனாலும் இந்த சேவையை பெற எனக்கு தடை ஏதுமில்லை. மக்களுக்கான சிறந்த அரசாங்கமாக சேவையாற்றி வரும் சிலாங்கூருக்கு பாராட்டுக்கள்," என்று கூறினார்.

ஊத்தான் மெலிந்தாங் கணேசன் கூறுகையில், ஏன் பேராக்கில் மந்திரி பெசார் இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை என்று தனது அகப்பக்கத்தில் கூறியுள்ளார்.

ஜோகூர், கூலாயை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தேசிய முன்னணி ஆளும் மாநிலங்களும் பாக்காத்தான் ஆளும் சிலாங்கூர் மாநிலத்தை பின்பற்ற வேண்டும் என்றார்.

"  நஜிப் மற்றும் மத்திய அரசாங்கம், அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்தின் சிறந்த இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டும். சிலாங்கூர், திறன் மிக்க மாநிலம். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

BAS SMART SELANGOR

 

 

 

 

 

 

இதனிடையே, கோத்தா அங்கிரீக் சட்ட மன்ற உறுப்பினர் யாக்கோப் சாப்பாரி தனது ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து பயண அனுபவங்களை அகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதன் அடிப்படையில் சிலாங்கூர் இன்று சமூக வலைதளங்களில் பதிவு செய்த செய்திகளை பகிர்ந்து கொள்கிறது.

# கு. குணசேகரன் குப்பன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.