RENCANA PILIHAN

சிலாங்கூர் அரசாங்கம் மக்கள் நலனுக்காக பல பில்லியனை செலவிடுகிறது

1 செப்டெம்பர் 2017, 11:22 PM
சிலாங்கூர் அரசாங்கம் மக்கள் நலனுக்காக பல பில்லியனை செலவிடுகிறது
சிலாங்கூர் அரசாங்கம் மக்கள் நலனுக்காக பல பில்லியனை செலவிடுகிறது

ஷா ஆலம், செப்டம்பர் 2:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம 2 மில்லியனுக்கு மேல் பரிவு மிக்க மக்கள் நல திட்டங்களுக்காக (ஐபிஆர்) செலவிட்டுள்ளது. மக்கள் சமூக நலம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது என்று சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் (யுனிசெல்) துணை இணை வேந்தர், பேராசிரியர் முனைவர் ஷாருடீன் படாரூடீன் கூறினார். செலவிடப்படும் திட்டங்களுக்கான பணத்தை சேமித்தால் மாநிலத்தின் கையிருப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றார்.

"   பரிவுமிக்க மக்கள் நல திட்டங்கள் என கல்வி உபகாரச் சம்பளம், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை, பெடுலி சேஹாட் சுகாதார அட்டை, ஹிஜ்ரா கடனுதவி மற்றும் பல்வேறு ஐபிஆர் திட்டங்களை செயல்படுத்தி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. மாநில வளத்தை மக்களுக்காக தொடர்ந்து திரும்பி கொடுக்கும் மாநில அரசாங்கம் சிலாங்கூர் என்றால் மிகையாகாது. சிறந்த முறையில் நிர்வகிக்கும் மாநில அரசாங்கம் தொடர்ந்து முதலீடுகளை பெற்றுள்ளது. அண்மையில் இகியா நிறுவனம் தனது ஆசியா பசிபிக் வட்டாரத்தின் விநியோக மையமாக சிலாங்கூரில் அமைந்துள்ள பூலாவ் இண்டாவை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Selangorkini 1 - 8 Sept 2017

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை தொடர்ந்து மாநில நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்படுவதாக தெரிவித்தார். ஆக, மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்கள் சிலாங்கூர் மாநிலத்தை பின்பற்ற வேண்டும். அரசாங்கம் தங்களை தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். தங்களுக்கு ஒருமித்த ஆதரவு அளித்த மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்யும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நடைமுறையை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.