SELANGOR

ஐடிஇ: 14-வது பொதுத் தேர்தலில் பிஎன் புத்ரா ஜெயா மற்றும் 8 மாநிலங்களை இழக்கும்

29 ஆகஸ்ட் 2017, 1:49 AM
ஐடிஇ: 14-வது பொதுத் தேர்தலில் பிஎன் புத்ரா ஜெயா மற்றும் 8 மாநிலங்களை இழக்கும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 29:

டாரூல் எசான் கல்லூரி (ஐடிஇ) நடத்திய ' சேர்வே மலேசியா 2017', #மூட்ராக்யாட், 'மலேசியா எதிர் நோக்கும் பிரச்சனைகளால் மக்களின் மனநிலை' அடிப்படையில் அம்னோ தேசிய முன்னணி 14-வது பொதுத் தேர்தலில் மத்தியில் புத்ரா ஜெயாவை மற்றும் எட்டு மாநிலங்களையும் இழக்க நேரிடும். அடுத்த ஆறு மாதங்களில் 14-வது பொதுத் தேர்தல் நடந்தால் இந்த நிலைமை ஏற்படலாம்.

மேற்கண்ட ஆய்வில் 12,082,403 வாக்காளர்களில் இருந்து 4,486 பேரிடம் கேள்விகள் கேட்கப் பட்டதாகவும், அதன் தொடர்பில் தேசிய முன்னணி அரசாங்கம் 39% ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாக்காத்தான் ஹாராப்பான் மற்றும் பாஸ் கட்சி கைகோர்த்து போட்டியிட்டால் 59% பெற்று 60 ஆண்டுகால நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக தேசிய முன்னணி அரசாங்கம் மக்களால் வீழ்த்தப்படும்.

டாரூல் எசான் கல்லூரியின் துணைத் தலைவர் பேராசிரியர் டத்தோ முனைவர் முகமட் ரிஸுவான் ஓத்மான் மேலும் விவரிக்கையில், தேசிய முன்னணி எதிர்த்து பாக்காத்தான் ஹாராப்பான் மற்றும் பாஸ் ஒரே அணியில் இருந்தால் மட்டுமே இந்த நிலைமை ஏற்படலாம் என்று தெளிவு படுத்தினார்.

"    நான் இங்கே உங்களுக்கு காட்டிய புள்ளி விவரங்கள் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். மக்கள் இரண்டாக பிளவு பட்டு, ஒன்று தேசிய முன்னணிக்கும் மற்றொன்று பாக்காத்தான் மற்றும் பாஸ் கூட்டணிக்கும் ஆதரவை வழங்குகின்றனர். இந்த கூட்டணிக்கு என்ன பெயரோ எனக்கு தெரியாது, ஆனால் தேர்தல் அடுத்த ஆறு மாதங்களில் நடந்தால் 59% மலேசியர்களின் ஆதரவை பெற்று புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைக்கும்," என்று டாருல் ஏசான் கல்லூரியின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், சிலாங்கூர், பினாங்கு மற்றும் கிளந்தான் பாக்காத்தான் கையிலே இருக்கும் நிலையில், கெடா, பேராக், மலாக்கா, பகாங் மற்றும் கூட்டரசு பிரதேசம் எதிர்க்கட்சிகளின் வசமாகும் என்று உறுதியாக கூறினார்.

பொதுத் தேர்தலில் 59% மக்களின் ஆதரவு மத்திய அரசாங்கத்தை வெற்றி கொள்ள போதுமானது என்றார்.  கடந்த 13-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற 46% மேலும் 7% குறைந்து 39% இருப்பது நாட்டை வழி நடத்தும் விதம் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே அர்த்தம் என்று தெரிவித்தார். இதனிடையே எதிர்க்கட்சிகளின் மீதான ஆதரவு கடந்த தேர்தலை விட 5% உயர்ந்து 59% ஆக இருப்பது மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

தமிழாக்கம்

கு.குணசேகரன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.