NATIONAL

1எம்டிபி ஊழலை விவரிக்க துன் மகாதீர் திரெங்கானுவிற்கு பயணம்

24 ஆகஸ்ட் 2017, 3:32 AM
1எம்டிபி ஊழலை விவரிக்க துன் மகாதீர் திரெங்கானுவிற்கு பயணம்
1எம்டிபி ஊழலை விவரிக்க துன் மகாதீர் திரெங்கானுவிற்கு பயணம்
1எம்டிபி ஊழலை விவரிக்க துன் மகாதீர் திரெங்கானுவிற்கு பயணம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 24:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை கலாச்சாரத்தை பொருட்படுத்தாமல் மத்திய அரசாங்கத்தின் ஊழல்களை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் அவரின் உற்சாகம் ஒரு துளியும் குறையவில்லை.

கோலா திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பஹ்ரின் ஷா கூறுகையில், மகாதீர் தனது போராட்டத்தை தொடர்ந்து திரெங்கானு மாநிலத்திற்கு கொண்டு வருகிறார் என்றார். ஷா ஆலம் நடந்த மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0 பிறகு இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

Raja_Kamarul_Bahrin_Shah2

 

 

 

 

 

திரெங்கானு மாநில மக்கள், 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) ஊழலை விவரிக்க துன் மகாதீர் வருவதை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். 1எம்டிபி ஆரம்பத்தில் திரெங்கானு முதலீடு நிறுவனமாக  (திஐஏ) இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜா பஹ்ரின் மேலும் கூறுகையில், 14-வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், மலேசியா வரலாற்றில் மிக நீண்ட காலமாக பிரதமர் பதவியை அலங்கரித்த மகாதீர் திரெங்கானு மாநில மக்களுடன் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்வாக அமையும் என்று தெரிவித்தார்.

IMG_20170813_192211-1024x683

 

 

 

 

 

"    மகாதீர் கலந்து கொண்ட விவாத மேடையில் நடந்த தாக்குதல் சம்பவம் துன் மகாதீரை மக்களுக்கு தகவல் சமர்ப்பிக்கப்படும் நடவடிக்கையை தடுக்க சில தரப்பினர் முயற்சிகள் செய்து வருவது தெரிகிறது. கோலா திரெங்கானு மக்கள் சாபாங் தீகா சந்தையில், எதிர் வரும் ஆகஸ்ட் 26-இல், இரவு 9 மணிக்கு திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.