NATIONAL

14 பொதுத் தேர்தல்: அம்னோவுக்கு பிரியாவிடை?

21 ஆகஸ்ட் 2017, 8:35 AM
14 பொதுத் தேர்தல்: அம்னோவுக்கு பிரியாவிடை?

ஷா ஆலம், ஆகஸ்ட் 21:

மாற்றத்திற்கான அரசியல் ஆய்வு மையம் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ மலாய்காரர்களின் வாக்குகளை இழக்க நேரிடும், ஏனெனில் தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளே ஆகும் என்று

இந்த ஆய்வு மையத்தின் இயக்குனர் ஊய் ஹெங் கூறினார். இதே போன்று இரண்டு பொதுத் தேர்தல்களில், 1990 மற்றும் 1996-இல் அப்போதைய அம்னோ தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் இரண்டு முக்கிய தலைவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அம்னோ பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் மலாய்காரர்களின் வாக்குகள் அம்னோவிற்கு குறைந்த நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து எதிர் வரும் பொதுத் தேர்தலில் சில நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும்.

"   தெங்கு ரஸாலி ஹாம்ஸா செமங்காட் 46 கட்சியை தொடங்கிய போது அம்னோ 12 நாடாளுமன்ற தொகுதிகளை இழந்த நிலையில் 83 தொகுதிகளில் இருந்து 71 குறைந்தது. அதே போன்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணைப் பிரதமர் பதவியில் நீக்கப்பட்ட போது 1998-இல் அம்னோவில் இருந்து வெளியாகி கெஅடிலான் கட்சியை தொடங்கினர். இதனால், 17 நாடாளுமன்ற தொகுதிகளை அம்னோ, 1999 நடந்த 10-வது பொதுத் தேர்தலில் இழந்தது," என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ மேலும் 15 இருந்து 20 தொகுதிகளை இழக்கலாம். மலாய்காரர்களை கவரத் தவறினால் 73 அல்லது 68 தொகுதிகள் மட்டுமே அம்னோவிற்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.