PBT

பண்டான் பெர்டானா அரங்கின் கட்டுமான பணிகள் தாமதம் ஆகாது

20 ஆகஸ்ட் 2017, 4:48 AM
பண்டான் பெர்டானா அரங்கின் கட்டுமான பணிகள் தாமதம் ஆகாது

அம்பாங், ஆகஸ்ட் 20:

பண்டான் பெர்டானா அரங்கின் கட்டுமான பணிகள் தாமதமாகிறது என்று செய்தியை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மறுப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹமீத் ஹூசேன் கூறினார். பணிகள் முடிவடையும் தருவாயில், மின் விளக்குகள் அதிகரிக்கப்பட்டு, அதனை நிறைவேற்றும் பணிகளுக்கு அதே குத்தகையாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

"   தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அம்பாங் நகராண்மை கழகத்தின் நிதி நிர்வாகம் சிறப்பான முறையில் உள்ளது. அதன் அடிப்படையில், மின் விளக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அரங்கை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். விலங்குகளை பொருத்தும் பணிகளுக்காக ஏற்கனவே அரங்கை நிர்மாணித்த நிறுவனத்திற்கு குத்தகை நீட்டிப்பு செய்யப்பட்டது," என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அப்துல் ஹமீத் மேலும் விவரிக்கையில், பண்டான் பெர்டானா அரங்கம் கட்டுமான பணிகள் ரிம 18 மில்லியனை செலவில் நிறுவப்பட்டது என்றும் மேலும் விளக்குகள் பொருத்த ரிம 3.5 மில்லியன் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் விவரித்தார். தற்போது 92% வேலைகள் முடிந்துவிட்டது எனவும் இந்த அரங்கம் சுற்று வட்டார மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

2.37 ஹேக்டர் பரப்பளவில் கட்டப்பட்ட அரங்கம் எம்ஆர்ஆர்2 நெடுஞ்சாலையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 1100 இருக்கைகள் கொண்ட பண்டான் பெர்டானா அரங்கம் 400 மீட்டர் ஓடும் தளம், கால்பந்து மைதானம் மற்றும் கார் நிறுத்துமிடம் போன்ற அனைத்து வசதிகளும் கொண்டு செயல்படும் என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.