SELANGOR

அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு மாநில அரசாங்கத்தின் மான்யங்கள்

18 ஆகஸ்ட் 2017, 8:17 AM
அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு மாநில அரசாங்கத்தின் மான்யங்கள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 18:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14 அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு மாநில உதவி நிதி வழங்கப்பட்டதாக மாநில சுகாதார, மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். சமூக நல இயக்கங்களுக்கு தமது ஆட்சிக் குழுவின் கீழ் ஊக்குவிப்பு தொகையாக கொடுக்கப் பட்டுள்ளது என்று கூறினார்.

மாநில அரசாங்கத்தின் திட்டங்களான பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களை (ஐபிஆர்) சிலாங்கூர் வாழ் மக்களுக்கு கொண்டு செல்ல பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

"     சிலாங்கூர் மாநிலத்தின் அரசு , தனது மக்கள் நலம் கோட்பாடுகள் ஏற்ப இனம், மொழி, சமயம் கருதாமால் ,குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் அரசு சார்பற்ற இயக்கங்கள் மேலும் தங்களது சமூக நல கடமைகளை செய்வதற்கு மானியத்தை நேற்று 15/08/17 , மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் டரோயா அவர்கள்,  வழங்கினார் . அரசு மூலமாக பெறப்பட்ட பணம் , வட்டார இயக்கங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஊக்கமாக இருக்கும் என்பது உண்மை," என்று புக்கிட் பெருந்தோங் இந்து சங்கத்தின் தலைவர் திரு கணமூர்த்தி தெரிவித்தார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.