NATIONAL

மும் முனை சந்திப்பு, பாக்காத்தானை பலப்படுத்தும் நோக்கம் கொண்டது

14 ஆகஸ்ட் 2017, 7:13 AM
மும் முனை சந்திப்பு, பாக்காத்தானை பலப்படுத்தும் நோக்கம் கொண்டது
மும் முனை சந்திப்பு, பாக்காத்தானை பலப்படுத்தும் நோக்கம் கொண்டது

கோலா லம்பூர், ஆகஸ்ட் 14:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர், துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் தானும் சந்தித்த முத்தரப்பு சந்திப்பு நிகழ்ச்சி எதிர் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற கூட்டணியை வலுப்படுத்த முயற்சிகள் அடிப்படையில் அமைந்தது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த சந்திப்பு அன்வார் மற்றும் அம்னோ இளைஞர் தேசிய தலைவர் கைரி ஜமாலுதீன் வழக்கு விசாரணை திகதிகளை நிர்ணயம் செய்யும் போது நடைபெற்றதாக கூறினார்.

"   நாட்டின் எதிர் காலத்தை பற்றி நிறைய பேசினோம். எப்படி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்த முடியும். துன் டாக்டர் மகாதீர் முகமட், நேற்று நடந்த ' எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0' நிகழ்ச்சியில் நடந்த குறித்து விளக்கம் அளித்தார். காவல்துறை சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடர்பில் நாம் தொடர்ந்து கண்காணித்து வருவோம்," என்று தெரிவித்தார்.

IMG_20170814_144350

 

 

 

 

 

 

 

 

இதனிடையே தாமும் கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அவர்களும் பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை சந்தித்த நிகழ்வை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பு, அப்துல் ஹாடி தனது அறுவை சிகிச்சைக்கு பிறகு நலம் பெற வேண்டி கெஅடிலான் இறைவனை வேண்டுகிறது என்று தெரிவித்தார். இதற்கு முன், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் யாரையும் சந்திக்க மறுத்துவிட்டார். தற்போது உடல் நிலை தேறி சிறந்த முன்னேற்றத்தை நோக்கி அப்துல் ஹாடி சென்று கொண்டிருப்பதை அஸ்மின் அலி உறுதி படுத்தினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.