RENCANA PILIHAN

ஜனநாயகத்தை நாகரீகமாக போற்றப்பட வேண்டும், வன்முறை கலாச்சாரமாக அல்ல!!!

14 ஆகஸ்ட் 2017, 4:40 AM
ஜனநாயகத்தை நாகரீகமாக போற்றப்பட வேண்டும், வன்முறை கலாச்சாரமாக அல்ல!!!
ஜனநாயகத்தை நாகரீகமாக போற்றப்பட வேண்டும், வன்முறை கலாச்சாரமாக அல்ல!!!

ஷா ஆலம், ஆகஸ்ட் 14:

கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நாகரீகமற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மேலும் கூறுகையில், ஜனநாயகம் போற்றப்பட வேண்டும் எனவும் பல்வேறு விதமான கருத்துகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, மாறாக வன்முறை மற்றும் மிரட்டல் இதற்கு தீர்வாகாது என்று விவரித்தார்.

மேலும், மலாய்காரருக்கு உரிய பண்பு, சீரிய சிந்தனைகள், மற்றவர்களை மதிக்கும் பண்பு மற்றும் உயர்ந்த மரியாதை குணங்களை கொண்ட இனமாக இருப்பதை நினைவு படுத்தினார்.

"   என்னுடைய லட்சியமான, நாகரீகமான இனத்தை மேம்படுத்த வேண்டும் மற்றும் இந்த உயரிய பண்பை பாதுகாக்க வேண்டும். 'தீனியை' பெற்றுக் கொண்ட சிலர் காலனியை மற்றும் நாற்காலியை வீசும் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். நாற்காலி, காலனி மற்றும் நெருப்பு பந்து வீசுவது கண்டிப்பாக லஞ்ச ஊழல் செயலை மறைக்க முடியாது," என்று 1000 சிலாங்கூர் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு முன் பேசினார்.

IMG_20170814_104328

 

 

 

 

 

 

மாநில அரசாங்க ஊழியர்களின் மாதாந்திர பேரணி மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான 2017-இன் 'மலேசிய கொடியை பறக்க விடுவோம்' பிரச்சாரத்தை தொடக்கி வைத்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.