NATIONAL

எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0: சிலாங்கூர் இன்றுவின் புகைப்பட பணியாளர் மீது தாக்குதல்

14 ஆகஸ்ட் 2017, 3:05 AM
எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0: சிலாங்கூர் இன்றுவின் புகைப்பட பணியாளர் மீது தாக்குதல்
எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0: சிலாங்கூர் இன்றுவின் புகைப்பட பணியாளர் மீது தாக்குதல்

ஷா ஆலம், ஆகஸ்ட் 14:

நேற்று மாலை ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற 'எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0' நிகழ்ச்சியில் பணியில் ஈடுபட்ட தகவல் ஊடகங்களின் பணியாளர்களும் கலவரத்தை திட்டமிட்டு நடத்திய பொறுப்பற்ற நபர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் இன்றுவின் புகைப்பட பணியாளர் சுஹாயிப் அயோப், 29, தள்ளப்பட்டு, முட்டிக் காலில் உதைக்கப்பட்டார். தங்களின் படங்களை பதிவு செய்து உள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட நபர் தாக்குதலில் ஈடுபட்டார்.

கார் நிறுத்துமிடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட வேளையில், சம்பந்தப்பட்ட நபர் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுஹாயிப் கூறினார்.

"   எப்போதும் போல தள்ளுமுள்ளு ஏற்படும் போது, படங்களை பதிவு செய்வது வழக்கம். தனது சகோதரரை தடுத்து வைத்த பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபரை படம் எடுக்க முற்பட்ட போது மேலும் ஒருவர் தாக்குதல் நடத்தினார்," என்று தெரிவித்தார்

இறுதியில், பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட நபரை விசாரணைக்கு பிறகு விடுவித்தனர்.

CP2A2011-1024x682

 

 

 

 

 

தாமும் மற்ற சக தகவல் ஊடகங்களின் பணியாளர்களும், நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனதால், சம்பவம் நடந்த இடத்தை விட்டு வெளியேறினோம் என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

சுயமாக இயங்கும் நிருபரான ரட்ஷி ரசாக், 32, நாற்காலிகள் பறந்து வரும் போது கால் இடறி விழுந்து காயமடைந்ததாக கூறினார். சிறிய காயங்களுடன் ஷா ஆலம் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.