SUKANKINI

ஆசிய பனிச் சறுக்குப் போட்டி:மலேசியச் சிறுமி ஶ்ரீஅபிராமி சாதனை படைத்தார்! 

9 ஆகஸ்ட் 2017, 1:53 PM
ஆசிய பனிச் சறுக்குப் போட்டி:மலேசியச் சிறுமி ஶ்ரீஅபிராமி சாதனை படைத்தார்! 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9:

பெண்களுக்கான 250 மீட்டர் வேகப் பனிச் சறுக்கு ஓட்டப் பிரிவில் இன்று மலேசிய நேரப்படி மாலை 3.10க்கு ஐந்து வயது ஶ்ரீஅபிராமி தனது இறுதி போட்டிக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

இந்தோனிசியாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய பனிச் சறுக்குப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஶ்ரீஅபிராமி சந்திரன் போட்டியிடுகிறார். ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் பனிச் சறுக்குப் போட்டியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளார்கள். ஶ்ரீஅபிராமி 6 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான தனிநபர் பிரிவில் 4 போட்டியில் பங்கேற்றார்.

வெற்றிகரமாக இந்த நான்கு போட்டியிலும் அவர் இறுதி சுற்றுக்குத் தேர்வாகி மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.மூன்று போட்டிகளிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி மலேசியாவிற்குப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

அதேவேளையில், சிறுமி ஶ்ரீஅபிராமி, ஆசிய பனிச் சறுக்கு நடனப் போட்டியில் முதன் முறையாக தமிழ்ப் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வரலாறு படைத்தார். தமிழ்ப் பாடலான 'செந்தூரா.., செந்தூரா...' பாடலுக்கு அவர் பனிச் சறுக்கு அரங்கில் அபாரமாக நடனமாடி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறவிருக்கும் 250 மீட்டர் வேகப் பனிச்சறுக்குப் இறுதிப் போட்டியிலும் அவர் சிறப்பான திறனை வெளிப்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: வணக்கம் மலேசியா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.