SELANGOR

சிலாங்கூர் சுற்றுலா நிறுவனம் 'கென்டுரியான்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை

6 ஆகஸ்ட் 2017, 9:08 AM
சிலாங்கூர் சுற்றுலா நிறுவனம் 'கென்டுரியான்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை

ஷா ஆலம், ஆகஸ்ட் 6:

டத்தாரான் கெமெர்டேகாஹான், ஷா ஆலமில் நடைபெற்ற 2017 சிலாங்கூர் உணவு பெருவிழா நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இருந்த 'கென்டுரியான் 2017' ஏற்பாட்டுக்கும் சிலாங்கூர் சுற்றுலா நிறுவனத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அதன் தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் கூறியுள்ளது. அரசு சார்புடைய நிறுவனமான சிலாங்கூர் சுற்றுலா, கென்டுரியான் 2017 அல்லது டுரியான் உண்ணும் நிகழ்ச்சியில் எதையும் ஏற்பாடு செய்யவில்லை என்று அறிவித்தது.

" சிலாங்கூர் சுற்றுலா நிறுவனம், சிலாங்கூர் உணவு பெருவிழா அல்லது கென்டுரியான் 2017-இன் ஏற்பாட்டு குழுவினர் அல்ல. ஆகவே, எங்கள் தரப்பினர் யாரும் இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்படவில்லை. அங்கு நடந்த சம்பவம் குறித்து எதுவும் எங்களுக்கு தெரியாது," என்று செய்தியில் கூறியிருக்கிறது.

ஆனாலும், சிலாங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் கடமையாக கருதி விளம்பரம் செய்ய உதவி செய்ததாக கூறுகிறது. சிலாங்கூர் சுற்றுலா நிறுவனம் தங்களின் சின்னம் ஏற்பாட்டு குழுவினர் பயன்படுத்தியதை தொட்டு கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.