SUKANKINI

ஷா ஆலம் அரங்கின் மறுசீரமைப்பு பணிகள் ஆகஸ்டில் 90% முழுமை பெறும்

3 ஆகஸ்ட் 2017, 4:05 AM
ஷா ஆலம் அரங்கின் மறுசீரமைப்பு பணிகள் ஆகஸ்டில் 90% முழுமை பெறும்
ஷா ஆலம் அரங்கின் மறுசீரமைப்பு பணிகள் ஆகஸ்டில் 90% முழுமை பெறும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 3:

ஷா ஆலம் அரங்கின் கூரையை பழுது பார்க்கும் பணிகள் எதிர் வரும் ஆகஸ்ட் 11-க்குள் 90% முழுமை பெறும் என்று சிலாங்கூர் மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். அரங்கின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்ப்பார்த்ததை போல் சீராக நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

"  இது வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லா வசதிகளையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொஞ்சம் காலதாமதம் ஆகும். ஆனாலும், ஏற்பாட்டு குழுவினரின் தகவலுக்கு காத்து கொண்டு இருக்கிறோம். மேலும் கூடுதல் வசதிகள் தேவைப்படுமானால் ஏற்பாட்டு குழுவினர் எங்களிடம் தெரிவிக்கலாம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதனிடையே, இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் எதிர் வரும் ஆகஸ்ட் 11 ஷா ஆலம் அரங்கின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட வருவதை அமிரூடின் ஷாரி உறுதி செய்தார்.

 

IMG_20170714_164558

 

 

 

 

 

 

 

 

 

அமிரூடின் மேலும் கூறுகையில், மாநில அரசாங்கம், அரங்கின் நிர்வாகத்தை நீண்டகால அடிப்படையில் தொழில்முறையிலான நிறுவனத்திற்கு ஒப்படைக்க எண்ணம் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனாலும் சில ஆய்வுகள் செய்து அருகாமையில் உள்ள இடங்களை பாதிக்கப்படாத வண்ணம் மற்றும் லாபகரமான வகையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தற்போது, அரங்கின் நிர்வாகம் சீ விளையாட்டு போட்டிகளுக்கு மைதானம் பயன்படுத்த தயாராக இருப்பதாக ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.