NATIONAL

1எம்டிபி கடனை திருப்பி செலுத்தாததால், அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர் நோக்கலாம்

2 ஆகஸ்ட் 2017, 4:18 PM
1எம்டிபி கடனை திருப்பி செலுத்தாததால், அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர் நோக்கலாம்
1எம்டிபி கடனை திருப்பி செலுத்தாததால், அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர் நோக்கலாம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 3:

1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) கடனை செலுத்த தவறிவிட்டதால், மத்திய அரசாங்கம் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் திட்டமிட்டு செயல் பட வேண்டும். இது வரை நாட்டின் சரித்திரத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை என்று முன்னாள் மலேசிய கருவூலத்தின் துணை தலைமை செயலாளர் ரேமன் நவரத்தினம் கூறினார்.

முதல் தடவையாக நாட்டின் அரசாங்க முதலீடு நிறுவனமான 1எம்டிபி, அனைத்துலக பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனத்திற்கு (ஐபிஐசி) செலுத்த வேண்டிய AS$600 மில்லியனை (ரிம 2.6 பில்லியன்) கட்டத் தவறியது குறிப்பிடத்தக்கது.

"   நான் உண்மையில் அதிர்ச்சி அடைந்து விட்டேன். நாம் எப்போதும் கொடுக்கப்படும் காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தி விடுவோம்," என்று 27 ஆண்டுகள் கருவூலத்தில் பணியாற்றிய ரேமன் கூறியதாக மலேசியா இன்சைட் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் மலேசியா அனைத்துலக வெளிப்படை கொள்கை இயக்கத்தின் தலைவருமான ரேமன், நம் நாடு எந்த நேரத்திலும் கடன் தொகையை குறைக்கவோ அல்லது காலக்கெடுவை தள்ளிப்போட்டதோ கிடையாது என்று விவரித்தார்.

 

1MDB02

 

 

 

 

 

ஐபிஐசியின் நிறுவனர், மூபாடாலா வெளியிட்ட அறிக்கையில், 1எம்டிபி நிறுவனத்திற்கு மேலும் ஐந்து நாட்கள் காலக்கெடு கொடுத்துள்ளது என்றும் அப்படி கடனை அடைக்கவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை எதிர் நோக்கும் நிலை ஏற்படும் என்று கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், 1எம்டிபி திருப்பி செலுத்த தவறியது வெறும் 'தொழில் நுட்ப சிக்கலே'  மாறாக பணம் இல்லாத காரணத்தினால் அல்ல என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.