SELANGOR

125 வருட சரித்திரம் கொண்ட கிள்ளான் தோட்ட ஆலயம்

31 ஜூலை 2017, 5:19 AM
125 வருட சரித்திரம் கொண்ட கிள்ளான் தோட்ட ஆலயம்

கோல்ட் கோஸ்ட் மோரிப், ஜூலை 31:

ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் தாமான் கஞ்சோங் லாவுட் (கிள்ளான் தோட்டம்) ஆலய வருடாந்திர திருவிழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த ஆலயத்திற்கு மக்கள் நீதி கட்சியின் உதவி தலைவரும் ஶ்ரீ அன்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் சேவியர் ஜெயகுமார் சிறப்பு வருகை புரிந்தது மட்டும் அல்லாது ஆலயம் எதிர்நோக்கும் நில பிரச்சனைகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

இந்த ஆலய நிர்வாக பதிவும் அவர் மாநில ஆட்சி குழு உறுப்பினராக இருந்த போது அவருடைய உதவியோடு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. ஆலய நில பிரச்சனையை கண்டறிந்தது மட்டும் இல்லாமல் ஆலயத்தின் ஆரம்ப கால வழிபாட்டுத்  தலத்தை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர்   அதனை சரித்திர சின்னமாக்க முயற்சி செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் ஆலயம் சுமார் 125 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும். தற்போது ஆலயம் தனியார் நிலத்தில் இருந்து வருகிறது என்றும் ஆனாலும் செப்பாங் நகராண்மை கழக உறுப்பினர் தீபனுடன் இணைந்து நிலத்தை ஆலயத்திற்கு பெற்று தர சில முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

வருடாந்திர திருவிழாவில் அவரோடு செப்பாங் நகராண்மை கழக உறுப்பினர் தீபன், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்ககள் பலரும் கலந்து கொண்டனர்.   இவ்வேளையில் ஆலய நிர்வாகம் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டு சிறப்புச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.