SELANGOR

எஸ்எஸ்15 அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் மகளிர் மற்றும் ஓகேயு-விற்கு முக்கியத்துவம் கொடுக்கும்

31 ஜூலை 2017, 4:28 AM
எஸ்எஸ்15 அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் மகளிர் மற்றும் ஓகேயு-விற்கு முக்கியத்துவம் கொடுக்கும்
எஸ்எஸ்15 அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் மகளிர் மற்றும் ஓகேயு-விற்கு முக்கியத்துவம் கொடுக்கும்
எஸ்எஸ்15 அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் மகளிர் மற்றும் ஓகேயு-விற்கு முக்கியத்துவம் கொடுக்கும்

சுபாங் ஜெயா, ஜூலை 31:

20 ஆண்டு காலத்திற்கு பிறகு, சந்தைக்கு வரும் பொது மக்கள் மற்றும் வணிக கடைகளின் உரிமையாளர்கள் காத்திருந்த சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று சுபாங் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் ஹானா யியோ கூறினார். இங்குள்ள எஸ்எஸ்15 சந்தைக்கு வரும் வருகையாளர்கள் மற்றும் வணிக கடைகளின் உரிமையாளர்கள் கார் நிறுத்துமிடம் பற்றாக்குறை குறித்து சஞ்சலம் அடைந்தனர். இந்த கார் நிறுத்துமிடம் சுபாங் ஜெயா நகராண்மை கழகம், நகராண்மை கழக உறுப்பினர்கள், சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் இன்று வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டதை நினைத்து பெருமிதம் கொள்வதாக கூறினார்.

parkir 3

 

 

 

 

 

சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தற்காலிக தலைவர் முகமட் ஸூல்கார்னாயின் சே அலி கூறுகையில், இந்த அடுக்குமாடி கார் நிறுத்துமிட திட்டம் நகராண்மை கழகத்தின் திறன் மிக்க சுற்று சூழல் கொண்ட சூழ்நிலையை பொது மக்களுக்கு உருவாக்கி தரும் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி னார். இந்த மேம்பாட்டு திட்டம் ரிம 11.1 மில்லியன் செலவில் கட்டப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மே மாதத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பித்த நிலையில் ஜூலை 8-இல் முடிவடைந்து விட்டது என்று கூறினார்.

"   செப்டம்பர் 3 வரையில் பொது மக்கள் மற்றும் வணிகர்கள் இலவசமாக பயன்படுத்தலாம். அதன் பிறகு கார் நிறுத்துமிட சேவைக் கட்டணம் விதிக்கப்படும்," என்று விவரித்தார்.

parkir 2

 

 

 

 

 

நவீன முறையில் கட்டப்பட்டிருக்கும் கார் நிறுத்துமிடம் நான்கு மாடிகளை கொண்டது. மொத்தம் 630 நிறுத்துமிடங்கள் கொண்டு செயல்படும் என்றும் அதில் 14 உடல் ஊனமுற்றோர்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 12 கார் நிறுத்துமிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 24- மணி நேர காமிராக்கள் பொருத்தப்பட்டு சுபாங் ஜெயா நகராண்மை கழகத்திற்கு நேரிடையாக இணைக்கப் பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுடுள்ளது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.