ஷா ஆலம், ஜூலை 28:
வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகர நல்வாழ்வு அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஒமார் குறுகிய வட்டத்திலான அரசியல் சித்தாந்தங்களை கடைபிடித்து வருகிறார். செக்சன் 21-இல் அமைந்துள்ள திடக்கழிவு மாற்று நிலையத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் தன்னுடைய சுயரூபத்தை வெளிக்காட்டி உள்ளார் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.
மாநில அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்து வந்துள்ளது. வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் குத்தகை முடிந்துவிட்ட நிலையில் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் நீதிமன்ற முடிவை ஏற்று நடவடிக்கைகளை நிறுத்தியது விட்டது குறிப்பிடத்தக்கது.
" ஆக, இப்போது என்ன பிரச்சனை? நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ஏன் நோ ஒமார் மீண்டும் பிரச்சனையை கிளப்பி வருகிறார்? இது ஒரு பொறுப்புள்ள அமைச்சரின் செயல்பாடுகள் அல்ல மாறாக இது போன்று எந்த அமைச்சரும் செய்தது கிடையாது," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதற்கு முன்பு, நோ ஒமார் மாநில அரசாங்கம் குத்தகையை தொடராத நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டி வந்தார்.
மேலும் கூறுகையில் அஸ்மின் அலி, தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினரான நோ ஒமார் தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் நன்முயற்சிகளை பாழாக்கி விட துடிக்கும் செயல் கண்கூடாக பார்க்கிறோம்.
தொடர்ந்து பேசுகையில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாற்று திட்டத்தை தீட்டி உள்ளது எனவும் மூன்று ஊராட்சி மன்றங்களின் குப்பைகளை வேறு இடத்தில் கொட்டும் படி கட்டளை இடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
" குப்பைகளை கொட்ட இடம் கொடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் இந்த இடத்தை எதற்கு நோ ஒமார் பயன்படுத்த போகிறார்? இவரின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. நோ ஒமாரின் இன்னொரு பொறுப்பற்ற செயல்பாடுகளின் எடுத்துக்காட்டு," என்று விவரித்தார்.
#கேஜிஎஸ்


