SELANGOR

சிலாங்கூர் சட்ட மன்றம் 1எம்டிபியினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய அனுமதி வழங்கியது

25 ஜூலை 2017, 10:52 AM
சிலாங்கூர் சட்ட மன்றம் 1எம்டிபியினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய அனுமதி வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 25:

சிலாங்கூர் சட்ட மன்ற கூட்டத் தொடரில் இரண்டாவது நாளான இன்று மாநில அரசாங்கத்தை 1 மலேசியா மேம்பாட்டு நிறுவன  (1எம்டிபி) ஊழலினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய கொண்டு வந்த பரிந்துரையை விவாதித்து ஏற்றுக் கொண்டது.

ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கொண்டு வந்த பரிந்துரையில் மக்களின் வாழ்வியல் மற்றும் வரிச்சுமை போன்றவையும் அடங்கும்.

"   மாநில அரசாங்கத்தை அமெரிக்கா நீதித்துறை இலாகாவின் குற்றச்சாட்டின் அடிப்படையில்   1எம்டிபி ஊழலினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய வேண்டும். முதலீடுகள், பொருளாதாரம், வரி போன்ற அனைத்தும் 1எம்டிபியினால் சிலாங்கூர் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பை நாம் அறிய வேண்டும்," என்று சட்ட மன்றத்தில் பேசினார்.

மேற்கண்ட விவாதத்தினால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொறுமை இழந்து காணப்பட்டனர். இந்த விவாதத்தில் செகிஞ்சான், சபாக் மற்றும் கோத்தா அங்கிரீக் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.