ஷா ஆலம், ஜூலை 24:
சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டத் தொடரில் இன்று மாலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 'டெடாக்'(கோழித்தீவனம்) என்ற சொல்லை சட்ட மன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என கூச்சல் இட்டனர்.
செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சியூ லிம் கூறிய 'பெமாக்கான் டெடாக்' என்று அம்னோ தலைவர்களை குறிப்பிட்டுச் சொன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டனர். பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை செய்யும் தவறுகளை மூடி மறைக்க அம்னோ தலைவர்களுக்கு கொடுக்கப்படும் பணமே 'டெடாக்' என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், எதிர்க்கட்சியினரின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் 'டெடாக்' மிருகங்கள் வளர்ப்பு துறையில் பயன்படுத்தக் கூடிய முக்கியமான பொருள் என்று '1எம்டிபி ஊழல் சிலாங்கூர் மக்களுக்கு சுமையாக இருக்கிறதா' என்று ஆராயும் பரிந்துரையை விவாதிக்கும் போது கூறினார்.

சியூ லிம் கூறிய வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் கூறுமாறு வலியுறுத்திய அம்னோ சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அமளி துமளி இறுதியில் சபாநாயகர் ஹான்னா யியோ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினரை மற்ற சட்ட மன்ற உறுப்பினர்களை தொடர்பு படுத்தி பேசாமல் தொடர்ந்து உரையாற்றக் கூறினார்.
#கேஜிஎஸ்


