SELANGOR

எம்ஓ1 மனைவியின் வைர மோதிரம், பெடுலி சேஹாட் அட்டை திட்டத்தின் மொத்த செலவை ஈடுகட்டும்

24 ஜூலை 2017, 7:42 AM
எம்ஓ1 மனைவியின் வைர மோதிரம், பெடுலி சேஹாட் அட்டை திட்டத்தின் மொத்த செலவை ஈடுகட்டும்
எம்ஓ1 மனைவியின் வைர மோதிரம், பெடுலி சேஹாட் அட்டை திட்டத்தின் மொத்த செலவை ஈடுகட்டும்

ஷா ஆலம், ஜூலை 24:

மலேசிய முதன்மை தலைவரின்   (எம்ஓ1) மனைவி கொள்முதல் செய்த வைர மோதிரத்தின் விலை பெடுலி சேஹாட் சுகாதார அட்டைத் திட்டத்தின் மொத்த செலவை ஈடுகட்ட முடியும் என்று ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். மத்திய அரசாங்கத்தின் எம்ஓ1 வீண்செலவுகள் மூலம் பொது மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

"   அமெரிக்கா நீதித்துறை இலாகா வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தங்கும் விடுதி வாங்கியது, சொகுசு மாளிகை மற்றும் USD 27.3 மில்லியன் மதிப்பிலான வைர மோதிரம் எம்ஓ1 மனைவிக்கு பரிசாக வழங்கப்பட்டது போன்றவை அடங்கும். அமெரிக்கா டாலரை மலேசியா நாணயத்திற்கு மாற்றினால் ரிம 115 மில்லியன் ஆகும். இந்த தொகை ஏறக்குறைய பெடுலி சேஹாட் சுகாதார அட்டைத் திட்டத்தின் மொத்த செலவு என்றால் மிகையாகாது. இது உண்மையான கூற்று, கற்பனை அல்ல," என்று 13வது சிலாங்கூர் சட்ட மன்ற கூட்டத் தொடரில் விவாதம் செய்த போது கூறினார்.

Xavier

 

 

 

 

 

 

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.