ஷா ஆலம், ஜூலை 24:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் எப்போதும் வெளிப்படையான கொள்கையை கடைபிடித்து வருகிறது. இரகசிய காப்புச் சட்டம் (ஓஎஸ்ஏ) மற்றும் பாதுகாப்பு குற்றச் சட்டம் (சிறப்பு நடவடிக்கை) 2012 அல்லது சோஸ்மா போன்ற சட்டங்களுக்கு பின் ஒளிந்து கொண்டு பொது மக்களிடம் மறைத்து வைத்ததில்லை.
செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சியூ லிம் கூறுகையில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு நேர் மாறாக மத்திய அரசாங்கம் பல்வேறு சட்டங்களைக் கொண்டு பொது மக்களிடம் நிர்வாகக் கோளாறுகளை மூடி மறைக்கிறது என்று கூறினார்.
" மத்திய அரசாங்கம், ஓஎஸ்ஏ பயன்படுத்தி எல்லா ஊழல்களையும் மறைத்து விடுகிறது. ஆனால் சிலாங்கூர் மாநிலத்தில் ஓஎஸ்ஏ அல்லது சோஸ்மா போன்ற சட்டங்கள் வெளிப்படையான நிர்வாகத்திற்கு தடைக்கல்லாக இருந்ததே இல்லை," என்று 2017 சிலாங்கூர் மாநில 13-வது சட்டமன்ற கூட்டத் தொடரில் உரையாற்றிய போது கூறினார்.
#கேஜிஎஸ்


