PENDIDIKAN

243 யூபிஎஸ்ஆரில் சிறப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

23 ஜூலை 2017, 1:20 PM
243 யூபிஎஸ்ஆரில் சிறப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

ஷா ஆலம், ஜூலை 23:

கடந்த 2016-இல் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 243 தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசாங்கம் கௌரவித்தது. சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 8A பெற்ற மாணவர்களுக்கு ரிம 200, 7A எடுத்த மாணவர்களுக்கு தலா ரிம 150 மற்றும் 6A தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தலா ரிம 100 ஊக்குவிப்பு தொகையாக கொடுக்கப் பட்டது.

"  கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்தாலும், நாம் தொடர்ந்து மாணவர்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறோம். இந்த முயற்சி மாணவர்கள் அடுத்து வரும் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற தூண்டுகோலாக அமையும்," என்று 2016-இன் தமிழ்ப்பள்ளி யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான பாராட்டு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்பது  தோட்டப்புற மாணவர்கள் பொதுப் பல்கலைக் கழக ஊக்குவிப்பு தொகையை பெற்றனர். ரிம 3000 இருந்து ரிம 5000 வரை இவ்மாணவராகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.