RENCANA PILIHAN

மந்திரி பெசார்: ஜப்பான் பெக்கான் அல்லது பாகான் டத்தோவை தேர்வு செய்யவில்லை, மாறாக சிலாங்கூரில் முதலீடு செய்கிறார்கள்

15 ஜூலை 2017, 8:23 AM

உலு லங்காட், ஜூலை 15:

அரசியல் நிலைத்தன்மை மற்றும் மாநிலத்தின் சீரான பொருளாதார வளர்ச்சி ஆகிய கூறுகள் சிலாங்கூரை வட்டாரத்தில் சிறந்த முதலீட்டாளர்களின் தேர்வாக அமைகிறது என்பதில் சந்தேகமில்லை. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், மாநில அரசாங்கம், ஜப்பான் நாட்டுடன் பல்வேறு முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு இருதரப்பு வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

"   திறன்மிக்க மற்றும் நிலைத்தன்மையான நிர்வாகம், அந்நிய முதலீட்டாளர்கள் சிலாங்கூரை முதலீட்டுத் தலமாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் மிகையாகாது. மலேசியாவிற்கான ஜப்பான் தூதர் என்னை சந்தித்து மிகப்பெரிய முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் நிருபிக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பில் மூலம் ஜப்பான் நாடு நம் மாநிலத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதை உணர்த்துகிறது. மொத்த முதலீடாக ரிம 1.2 பில்லியன் கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்ட மாவட்டத்தில் இயங்கி வரும்," என்று தெரிவித்தார்.

selangor_maju

இதனிடையே அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட மாவட்டம் நேரம் வரும் போது அறிவிக்கப்படும் என்றார்.

இதற்கு முன்பு, மலேசிய முதலீடு மேம்பாட்டு வாரியம் (மீடா) தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

nagoya-jepun

கடந்த எட்டு மாதங்களில், மீடா 36 ஜப்பான் நாட்டின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் இதில் ரிம 1.05 பில்லியன் முதலீடுகள் 1280 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.