SELANGOR

கோம்பாக் நாடாளுமன்ற மற்றும் பத்து கேவ்ஸ் சட்ட மன்ற திறந்த இல்ல நிகழ்வு கோலாகலமாக நடந்தது

14 ஜூலை 2017, 11:25 PM
கோம்பாக் நாடாளுமன்ற மற்றும் பத்து கேவ்ஸ் சட்ட மன்ற திறந்த இல்ல நிகழ்வு கோலாகலமாக நடந்தது
கோம்பாக் நாடாளுமன்ற மற்றும் பத்து கேவ்ஸ் சட்ட மன்ற திறந்த இல்ல நிகழ்வு கோலாகலமாக நடந்தது

கோம்பாக், ஜூலை 15:

கோம்பாக் நாடாளுமன்றம் மற்றும் பத்து கேவ்ஸ் சட்ட மன்றமும் சேர்ந்து ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட நிலையில் கோலாகலமாக தொடங்கியது. பத்து கேவ்ஸ் சட்ட மன்ற உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறுகையில், பல்லின மக்கள் கலந்து கொண்டு ஒருமைப்பாட்டை வளர்க்கும் முறையில் நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.

"   பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வருகை புரிவதை பார்க்கும் போது சமுதாய நல்லிணக்கத்தை காட்டுகிறது. எல்லா தரப்பினருக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்," என்று பத்து கேவ்ஸ் பொதுத் திடலில் நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றம் மற்றும் பத்து கேவ்ஸ் சட்ட மன்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் பேசினார்.

 

IMG_2554

 

 

 

 

 

இதனிடையே, சிலாங்கூர் இன்றுவின் ஆய்வில் பொது மக்கள் மாலையில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர தொடங்கி விட்டதால் கார் நிறுத்துமிடம் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்சுவை உணவுகளை உண்டு சுவைத்த பொது மக்கள் இன்னிசை நிகழ்ச்சியையும் கண்டு இன்புற்றனர். நிகழ்ச்சியில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸூராய்டா காமாருடின், பெட்டாலிங் ஜெயா செலாதான் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹோய் சான், தாமான் மேடான் சட்ட மன்ற உறுப்பினர் ஹானிஸா தல்ஹா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமத்து தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் பங்கேற்று நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.

#கேஜிஎஸ்

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.