SELANGOR

பரிவுமிக்க மாநில அரசாங்க உதவி நிதிகள் பகிர்ந்தளிக்கப் பட்டது

6 ஜூலை 2017, 6:31 AM
பரிவுமிக்க மாநில அரசாங்க உதவி நிதிகள் பகிர்ந்தளிக்கப் பட்டது

  1. ஷா ஆலம், ஜூலை 6:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தோட்டப்புற மாணவர்கள் உதவி நிதி, அரசு சார்பற்ற இயக்கங்கள் மற்றும் ஆலயங்களுக்கான மான்யங்கள் இன்று சிலாங்கூர் மாநில தலைமையகத்தில், கெக்வா மண்டபத்தில் மாநில தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தோட்டப்புற மாணவர்களுக்கான நான்காம் கட்ட உதவி நிதி ரிம 34,000 பத்து மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. அரசு சார்பற்ற இயக்கங்கள், முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக 19 இயக்கங்களுக்கு ரிம 44,000 வழங்கப்பட்டன. மேலும் ஆறு ஆலயங்களுக்கு மொத்தம் ரிம 45,000 மான்யங்களாக கொடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, மாநிலத்தின் நிதி ஒதுக்கீடு கலை நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் விருந்தோம்பல் நிகழ்வுகளுக்கும் வழங்கும் நடைமுறையை பின்பற்றி வந்தது. ஆனாலும் 2008-க்கு பிறகு பரிவு மிக்க சிலாங்கூர் அரசாங்கம் மாநில மக்களுக்கு உதவிகள் நேரிடையாக சென்றடைய இது போன்ற மாற்றங்களைக் கொண்டு வந்தது சிறப்பாகும்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.