RENCANA PILIHAN

செமின்ஞே ஆற்றில் தூய்மைக்கேடு ஏதும் இல்லை

4 ஜூலை 2017, 1:28 AM
செமின்ஞே ஆற்றில் தூய்மைக்கேடு ஏதும் இல்லை
செமின்ஞே ஆற்றில் தூய்மைக்கேடு ஏதும் இல்லை
செமின்ஞே ஆற்றில் தூய்மைக்கேடு ஏதும் இல்லை

செமின்ஞே, ஜூலை 4:

சில சந்தர்ப்பவாத தனி நபர்கள், இண்டா ஓட்டர் கழிவுகள் கசிந்து வெளியாகி தூய்மைக்கேடு ஏற்படுத்துகிறது என்ற தவறான தகவல்களை பரப்பி கொண்டு வருவது பொறுப்புற்ற செயல் என்று செமின்ஞே சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர், ஹாமிடி ஹாஸான் சாடினார். இண்டா ஓட்டர் கழிவுகள் கசிந்து வெளியாகி செமின்ஞே ஆற்றில் கலந்து தூய்மைக்கேடு ஏற்படுத்தி உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

"   இண்டா ஓட்டர் கழிவுகள் வெளியாகினால் வெள்ள நீர் சேமிப்பு குளங்களுக்கு மட்டுமே செல்லும், மாறாக செமின்ஞே ஆற்றில் கலப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று அனைவருக்கும் நினைவுறுத்த விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.

"  ஆக, இதன் அடிப்படையில் செமின்ஞே ஆற்றில் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் நிலைமையை தவறாக பயன்படுத்த நினைக்கிறார்கள்," என்று இண்டா ஓட்டர் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிடும் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

இண்டா ஓட்டர் நிர்வாகமும் இதை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஹாமிடி பொது மக்களை, எந்த செய்திகளையும் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களின் மூலம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்.

"   இண்டா ஓட்டர் கழிவுகள் வெளியாகினால், உடனடியாக புகாரை நேரிடையாக அந்த நிறுவனத்திற்கு கொடுத்து தீர்வு பிறக்க வழி வகுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்

CP2A9217-1280x853 CP2A9223-1280x853

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.