PBT

கண்டிரி ஹோம்ஸ் நகரத்தில் 'பைன்' மரத்திற்கு பதில் 'மெராவான்'

3 ஜூலை 2017, 4:09 AM
கண்டிரி ஹோம்ஸ் நகரத்தில் 'பைன்' மரத்திற்கு பதில் 'மெராவான்'
கண்டிரி ஹோம்ஸ் நகரத்தில் 'பைன்' மரத்திற்கு பதில் 'மெராவான்'

ரவாங், ஜூலை 3:

ஏறக்குறைய 250 'மெராவான்' இனத்தைச் சேர்ந்த மரங்களை 'பைன்' மரங்களுக்கு பதிலாக செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) நட உள்ளது என்று எம்பிஎஸ்-இன் லேன்ஸ்கேப் பிரிவு இயக்குனர் மொக்தார் அப்ஃபெண்டி அப்துல் கானி தெரிவித்தார். இந்த நடவடிக்கையானது, நடப்படும் மெராவான் மரங்களின் வேர்கள் சாலைகள் மற்றும் வடிகால்களை பாதிக்காது என்ற அடிப்படையில் அமைந்துள்ளது என்று கூறினார்.

"   பொது மக்கள் இப்பகுதியில் உள்ள மரங்கள் மிக அதிகமான வயது கொண்டதாகவும் மற்றும் மழையினால் சாயும் சாத்தியம் இருப்பதாகவும் புகார் செய்தார்கள். மறுநடவு நடவடிக்கைகள் இந்த மாதத்தில் தொடங்க உள்ளது," என்று பைன் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Majlis Perbandaran Selayang

 

 

 

 

 

 

 

இதனிடையே, கண்டிரி ஹோம்ஸ் நகர மக்கள் பைன் மரங்களை வெட்டும் பணிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் மரங்களை வெட்டாமல் சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பைன் மரங்கள் கண்டிரி ஹோம்ஸ் நகரத்தின் அடையாளம் என்றும் குடியிருப்பாளர்கள் பைன் மரங்களை ஈர்க்கும் வகையில் இப்பகுதியில் வீடுகள் வாங்கியதாக கூறினர். சுமார் 20 ஆண்டுகள் கழித்து இன்று பைன் மரங்கள் வளர்ந்து விட்டது என்றும் தற்போது தான் வெயில் காலத்தில் நிழல் கொடுக்க ஆரம்பித்து உள்ளதாக ஒரு குடியிருப்பாளர்கள் கூறினார்கள்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.