RENCANA PILIHAN

சிலாங்கூர் மாநில திறந்த இல்ல நிகழ்வுக்கு வந்த வருகையாளர்களை அவமானப்படுத்தாதீர்கள்

3 ஜூலை 2017, 2:43 AM
சிலாங்கூர் மாநில திறந்த இல்ல நிகழ்வுக்கு வந்த வருகையாளர்களை அவமானப்படுத்தாதீர்கள்
சிலாங்கூர் மாநில திறந்த இல்ல நிகழ்வுக்கு வந்த வருகையாளர்களை அவமானப்படுத்தாதீர்கள்

ஷா ஆலம், ஜூலை 3:

சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு வந்த வருகையாளர்களை பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையானவர்கள் என்று கேவலமாக பேசுபவர்களை மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் சாடினார்.

நாட்டு நடப்பு தெரிந்துக் கொண்டு இவர்கள் பேச வேண்டும். பொது மக்கள் சிலர் பொருட்களின் விலை உயர்வினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. நோன்பு பெருநாளுக்கு பலகாரங்கள் செய்யக் கூட முடியாத சூழ்நிலையில் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி இஸ்கண்டர் தெரிவித்தார்.

"   சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு வந்த பொது மக்களை பட்டினியால் வாழ்பவர்கள், உணவு தட்டுப்பாடு உள்ளவர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் என்று மிகக் கேவலமாக பேசுபவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் தினந்தோறும் ஆடம்பர வாழ்க்கையில் வாழும் நிலையில் உணவுகள் பஞ்சம் இருக்காது. ஆனால் சாமானிய மக்களுக்கு நோன்பு பெருநாள் அன்று கூட சுவையான உணவு ஏற்பாடு செய்ய வசதிகள் இல்லாத சூழ்நிலை உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்," என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Raya

 

 

 

 

 

"  நிகழ்வில் கலந்து கொண்ட சில பொது மக்கள் சட்ட மன்ற உறுப்பினர்களிடம் இறைச்சி வாங்க உதவி கேட்ட போது, சங்கடமாக இருந்தது. பலகாரங்கள் வாங்கும் போது கணக்கு போட்டு பார்க்கும் சாமானிய மக்கள். புதிய துணிமணிகள் நினைத்துக் கூட பார்க்க முடியாது," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

பண்டான் இண்டா எம்பிஏஜே திடலில் சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் 50,000 பொது மக்கள் காலை 8 மணியில் இருந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் அரசர், மேன்மை தங்கிய சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் அவர்தம் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோர்ஹாசிகீன் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.