MEDIA STATEMENT

ஏர்ஆசியா ஏர்பஸ் A330-ஐ நிதானமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள்

28 ஜூன் 2017, 10:55 PM
ஏர்ஆசியா ஏர்பஸ் A330-ஐ நிதானமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள்

ஏர்ஆசியாவின் பெர்த்தில் இருந்து கோலா லம்பூருக்கு பயணித்த ஏர்பஸ் A330 ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை நம்மில் யாருக்கும் நேர்ந்திருக்கக் கூடாது. ஆனாலும், இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் விமானத்தை நிதானமாகவும் தொழில்முறையிலும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த விமானிக்கு எனது வாழ்த்துக்கள்..

ஏர்பஸ் A330 பணியாற்றிய விமானி மற்றும் சக பணியாளர்கள் அனைவரையும், நிலைமையை கட்டுப்படுத்தி விமானத்தை தரையிறக்கிய செயல் பாராட்டக்கூடியது. தொடர்ந்து வரும் பயணங்கள் நல்ல விதமாக அமைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இதே போன்று நமது சாதனையாளர்களான கேப்டன் இப்ராஹிம் ஜலாலுடின் மற்றும் D7237 பணியாளர்களும் நாட்டிற்கு புகழ் தேடித்தந்த வேளையில், அனைத்துலக ரீதியில் பதவி மற்றும் பண பலத்தின் மூலம் நிதிநிலை மோசடிகளில் ஈடுபட்டு நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்தி வருகிறார்கள்.

இந்த வேளையில் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உஸ்தாட் ஹாஷானுடின் முகமட் யூனுஸ்

அமானா கட்சியின் உதவித் தலைவர்

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.