SELANGOR

நோன்பு பெருநாளில் 'ஆயர் சிலாங்கூர்' அவசர சேவை திட்டம்

24 ஜூன் 2017, 2:33 AM
நோன்பு பெருநாளில் 'ஆயர் சிலாங்கூர்' அவசர சேவை திட்டம்
நோன்பு பெருநாளில் 'ஆயர் சிலாங்கூர்' அவசர சேவை திட்டம்

ஷா ஆலம், ஜூன் 24:

சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) எதிர் வரும் ஜூன் 24-இல் இருந்து ஜூலை 2-வரை நோன்பு பெருநாளை முன்னிட்டு எச்சரிக்கை அவசர நடவடிக்கை திட்டத்தை தீட்டி உள்ளது. ஆயர் சிலாங்கூர், இந்த நடவடிக்கை சிலாங்கூர், கோலா லம்பூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடுகளை பெருநாள் காலங்களில் சமாளிக்கும் வகையில் இருக்கும் என்று தமது தெளிவுபடுத்துகிறது.

loji-rawatan-air

 

 

 

 

 

இதனிடையே, 24 மணி நேர சேவை மையம் மற்றும் ஆயர் சிலாங்கூரின் அதிகாரப்பூர்வ குத்தகையாளர்கள் அவசர கால அடிப்படையில் குழாய்கள் உடைந்தால் அல்லது ஓட்டை ஏற்பட்டால் உடனடி சேவையில் இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் கூறியுள்ளது.

பொது மக்கள், பெருநாள் காலங்களில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தபடுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு பயனீட்டாளர்கள் ஆயர் சிலாங்கூர் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

www.syabas.com.my, mySYABAS (aplikasi telefon bimbit pintar) atau ikuti Facebook Air Selangor

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.