RENCANA PILIHAN

ஸ்பிலேஷ் கையகப்படுத்தும் முயற்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்

21 ஜூன் 2017, 7:01 AM
ஸ்பிலேஷ் கையகப்படுத்தும் முயற்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்
ஸ்பிலேஷ் கையகப்படுத்தும் முயற்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 21:

மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் சிலாங்கூர் நீர் உற்பத்தி நிறுவனத்தை (ஸ்பிலேஷ்) சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவாக பூர்த்தி அடையும் என்று சிலாங்கூர் நீர் வள நிர்வாக சிறப்புக் குழுவின் தலைவர் எங் சீ ஹான் கூறினார். இதனை முதன்மையாக கொண்டு செயல்பட்டால் மட்டுமே நீர் வளங்களை முறையாக நிர்வகிக்க முடியும்.

"   ஸ்பிலேஷ் கையகப்படுத்தும் நடவடிக்கை, நிர்ணயம் செய்யப்பட்ட காலகட்டத்தில் பொது மக்களின் நன்மைக்காக முடிவு செய்து விட வேண்டும். ஆயர் சிலாங்கூர், ஸ்பிலேஷ் நிறுவனத்தை   கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவாக பூர்த்தி செய்த பிறகு, நீர் விநியோகம் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் அனைத்தும் சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

ngszehan

 

 

 

 

 

 

 

 

மேலும் பேசுகையில், சிலாங்கூரில் முக்கிய இடங்களில் பழைய குழாய்களை மாற்றும் நடவடிக்கை மற்றும் பயன்படுத்தாத சொத்துடமை பட்டியல் போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பொதுவாக, தனது நடவடிக்கைக் குழு தற்போது நடந்து வரும் நிலவரங்களை கண்டு மனநிறைவு அடைவதாக கூறினார். சில நேரங்களில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் பொதுப்பணித் துறை இலாகா போன்றவைகளிடம் இருந்து அனுமதி தாமதமாக வந்தாலும் தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.