SELANGOR

டெங்கு காய்ச்சல் 14% குறைந்தது

20 ஜூன் 2017, 9:24 AM
டெங்கு காய்ச்சல் 14% குறைந்தது
டெங்கு காய்ச்சல் 14% குறைந்தது

ஷா ஆலம், ஜூன் 20:

கடந்த ஜூன் 17 வரை சிலாங்கூரில் 24,792 டெங்கு காய்ச்சல் நோய் சம்பவம் பதிவு செய்யப்பபட்டுள்ளது என்பதை டாக்டர் டரோயா அல்வி சுட்டிக் காட்டினார். சிலாங்கூர் மாநில சமூக நலம், சுகாதாரம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் டரோயா அல்வி, கடந்த ஆண்டை காட்டிலும் 4,187 சம்பவங்கள் அல்லது 14% குறைந்து இருப்பதாக கூறினார்.

மேலும், டெங்கு காய்ச்சல் நோயினால் இறப்புச் சம்பவங்களும் எட்டாக குறைந்த நிலையில் அல்லது  17% கடந்த ஆண்டைவிட இறக்கம் கண்டது குறிப்பிடத்தக்கது.

DAROYAH DENGGI

 

 

 

 

 

 

"   தற்போது, உலு லங்காட் மாவட்டத்தில் அதிகமான சம்பவங்கள் மற்றும் இறப்புச் சம்பவங்களை பதிவு செய்து உள்ளது," என்று தனது அறிக்கையில் கூறினார்.

டரோயா தொடர்ந்து தனது அறிக்கையில், டெங்கு ஒழிப்பு மாநில அரசாங்கம், மாநில சுகாதார இலாகா மற்றும் ஊராட்சி மன்றங்கள் ஆகியவற்றின்  பொறுப்பு மட்டும் அல்ல என்றார்.

"  இது அனைவரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம். அனைத்து தரப்பினரும் தங்களின் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் கொசுக்கள் அபிவிருத்தி செய்ய இடம் அளிக்கக்கூடாது," என்று விவரித்தார்.

இந்த ஆண்டு மட்டும் டெங்கு மற்றும் ஸீக்கா நோய்களை கட்டுப்படுத்த ரிம 5 மில்லியன் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் இவை ஊராட்சி மன்றங்களில் பூச்சி கட்டுப்பாடு ஆபரேட்டர் நியமனங்களுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

மாநில அரசாங்கம் ஊராட்சி மன்றங்களுக்கு ரிம 1.2 மில்லியனும் ரிம 560,000 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வீடமைப்பு பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்ட நில அலுவலகத்திற்கு ரிம 350,000 ஒதுக்கீடு செய்து டெங்கு காய்ச்சல் நோய் தடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து செயல் படுத்த பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் மாவட்ட அதிகாரி மாவட்ட டெங்கு நடவடிக்கை குழுவிற்கு தலைமையேற்க வேண்டும் என்றார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.