SELANGOR

சிலாங்கூர் இலவச பேருந்து சேவை: மக்களின் முதன்மை தேர்வு

17 ஜூன் 2017, 5:37 AM
சிலாங்கூர் இலவச பேருந்து சேவை: மக்களின் முதன்மை தேர்வு

ஷா ஆலாம், ஜூன் 17:

சிலாங்கூர் மாநிலத்தின் 11 ஊராட்சி மன்றங்களில் தனது பெருமிதமான சேவையினை தொடங்கியிருக்கும் ஸ்மார்ட் சிலாங்கூரின் இலவச பேருந்து சேவை இம்மாநில மக்களின் முதன்மை தேர்வாக இருப்பது பெருமிதமான ஒன்றாக அமைந்துள்ளது.மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் விவேகமான சிந்தனையில் உருவெடுத்த இலவச பேருந்து சேவையின் மூலம் அத்திட்டங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஜனவரி வரை சுமார் 5 மில்லியன் மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி நன்மை அடைந்துள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

மக்களின் அன்றாட பயன்பாட்டில் இன்றியமையாததாக விளங்கிடும் இலவச பேருந்து சேவை தற்போது 15 வழிபாதைகளில் சுமார் 52 பேருந்துக்கள் அதன் சேவையினை துள்ளியமாய் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.ஒரு நேரத்திற்கு 60 பயணிகளை உள்ளடக்ககூடிய ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துக்களில் கேமராக்கள், இணைய வசதி உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை என பல்வேறு வசதிகளையும் அஃது கொண்டுள்ளது.

மேலும்,இலவச பேருந்து சேவையின் பயண நேரம்,வழி தடம் உட்பட அது குறித்த தகவல்களை விவேக கைபேசிகள் மூலம் தகவல் அறிந்துக் கொள்ள ஏதுவாக “RIDE SMART BUS APP” எனும் பதிவிறக்க தகவல் மென்பொருள் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிடுவதோடு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவையையும் பயன்படுத்திட அஃது உதவுகிறது.

ஸ்மர்ட் சிலாங்கூர் பேருந்து சேவை

*11 ஊராட்சி மன்றங்கள்

*ஜூலை 2015 முதல் சேவை தொடங்கப்பட்டது

*52 பேருந்துகள்

*15 வழி தடங்கள்

*இணையம் வசதி,கேமரா வசதி

*மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து பயணிகள் எண்ணிக்கை

1.ஷா ஆலாம் மாநகர மன்றம் (எம்.பி.எஸ்.ஏ) 1,266,065

2.சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.ஜே) 1,003,537

3.கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே) 601,860

4.அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம் (எம்.பி.ஏ.ஜெ) 499,730

5.காஜாங் நகராண்மைக்கழகம் (எம்.பி.கே.ஜே) 873,599

6.செலாயாங் நகராண்மைக்கழகம் (எம்.பி.எஸ்) 618,340

7.சிப்பாங் நகராண்மைக்கழகம் (எம்.பி.எஸ்.பி) 103,879

8.கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்.டி.கே.எல்) 134,879

9.சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் (எம்.டி.எஸ்.பி) 57,390

10.கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்.டி.கே.எஸ்.) 64,618

11.உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்.டி.எஸ்.பி) 104,823

தொகுப்பு

சிலாங்கூர் இன்று ஆசிரியர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.