நவீன் மற்றும் ஸூல்ஃபார்ஹான் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். தற்போது நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் தவறிழைத்ததாக சாடிவிட்டு பிறகு இவர்களின் மரணத்தை மறந்து விடுகிறோம். இது ஒரு குடும்பத்தின் பிரச்சனை அல்ல, மாறாக சமுதாயத்தின் நிலைமை இவ்வாறு மோசமாகி விட்டது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பகடிவதையை நிறுத்த வேண்டும். ஆக, பெற்றோர்கள், ஆசிரியர்கள், இளையோர், அரசு சார்பற்ற இயக்கங்கள் மற்றும் அரசாங்கம் இதில் முறையான பங்கு வகிக்க முடியும்.
மரணத்தின் மூல காரணமானவர்கள் மீது அதிகப்படியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று என்ன உத்தரவாதம்? இளையோர்களே நாட்டின் எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால் இன்றுள்ள நடைமுறை பகடிவதை செயலை தடுக்க முடியாது.
சமுதாயத்தில் மீண்டும் பகடிவதை நடப்பதை தடுக்க புதிய சட்ட திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் 2013-இல் குடியரசு சட்டம் 10627 அல்லது பகடிவதை எதிர்ப்பு சட்டம் கொண்டு வந்து பள்ளிகளில் அமல்படுத்தினர்.

நாம் பகடிவதையை நிறுத்த தைரியமான முடிவு எடுக்க வேண்டும். கெஅடிலானின் மகளிர் பிரிவு நவீன் மற்றும் ஸூல்ஃபார்ஹான் ஆகிய இருவரின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம். எங்களின் இரங்கலை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கிறோம்.
முறையான நடைமுறை பின்பற்றி, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு கவுன்சிலிங் செய்து ஆரம்ப காலத்திலேயே பகடிவதையை தடுக்கலாம். மேலும் இந்நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணித்து வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்பில் அலட்சியமாக இருக்கக்கூடாது. எப்போதும் நமது பிள்ளைகள், எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? யார் அவர்களின் நண்பர்கள்? எப்படி அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்? இவை அனைத்தும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில் பகடிவதைக்கு ஆளாகி வருகின்றவர்கள் அமைதியாக இருந்து தங்களின் மேல் தவறு என்று நினைத்து கொண்டு இருப்பார்கள். 'அவுட்ரீச்' திட்டத்தில் பள்ளி பிள்ளைகள் மற்றும் இளையோர்கள் எதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது கூடாது என்று தெரிந்து கொள்ளலாம். பகடிவதைக்கு ஆளாகி உள்ளோர் வெட்கப்படவோ அல்லது பயப்படவோ கூடாது.
கெஅடிலான் மகளிர் பிரிவு பகடிவதைக்கு ஆளாகி வருகின்றவர்கள் எங்களை இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும். bantuan.keadilan@gmail.com
*ஸூராய்டா படாரூடின்
அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்
கெஅடிலான் மகளிர் தலைவி
#கேஜிஎஸ்


