NATIONAL

நவீன் இறப்பை, கொலை வழக்காக மாற்றப்பட்டது

16 ஜூன் 2017, 1:57 AM
நவீன் இறப்பை, கொலை வழக்காக மாற்றப்பட்டது
நவீன் இறப்பை, கொலை வழக்காக மாற்றப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 16:

தாக்குதல் வழக்காக இருந்த நவீன் விடயத்தில் மலேசிய அரச காவல்துறை, கொலை குற்றமாக மாற்றம் செய்துள்ளதாக தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் இறப்பு கொலை வழக்காக மாற்றப்பட்டதை அவர் உறுதிப் படுத்தியதாக அஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.

nhaveen

 

 

 

 

இதற்கு முன்பு, வடகிழக்கு மாவட்ட காவல்துறை ஆணையர் ஏசிபி அன்வர் ஒமார், நவீன் இறப்பு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு செக்சன் 302 குற்றவியல் விதிகளின்படி விசாரணை நடத்தப்படும் என்பதில் சாத்தியம் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 16 வயதில் இருந்து 20 வயதிற்கு உட்பட்ட ஐந்து நபர்களை செக்சன் 148-இன் குற்றவியல் படி ஆயுதம் ஏந்தி கலவரம் செய்ததாகவே காவல்துறை கைது செய்ததாக கூறியது. ஆறு நாட்கள் பினாங்கு மருத்துவமனையின்  ஐசியூ பிரிவில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு நவீன் இறந்ததாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 11-இல் நவீன், ஜோர்ஜ் டவுன், காக்கி புக்கிட் சாலையில் அமைந்துள்ள  கர்பால் சிங் கல்வி மையம் அருகாமையில் சில தரப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதலினால் நவீன் மூளை இறப்பு ஏற்பட்டதாகவும் மற்றும் மருத்துவ அறிக்கையின்பபடி பாலியல் கொடுமை நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

நவீனின் உடல் இன்று பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.