NATIONAL

14வது பொதுத் தேர்தல்: அம்னோ பிஎன்னை காப்பாற்ற வாக்காளர்களை தொகுதி மாற்றம்?

12 ஜூன் 2017, 8:13 AM
14வது பொதுத் தேர்தல்: அம்னோ பிஎன்னை காப்பாற்ற வாக்காளர்களை தொகுதி மாற்றம்?
14வது பொதுத் தேர்தல்: அம்னோ பிஎன்னை காப்பாற்ற வாக்காளர்களை தொகுதி மாற்றம்?

ஷா ஆலம், ஜூன் 12:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) நேர்மையான, நீதியான மற்றும் சுயேட்சையான முறையில் தேர்தல் நடத்தும் பொறுப்பில் தோல்வி அடைந்ததாகவும் அதன் நடவடிக்கைகள் ஆளும் தேசிய முன்னணி கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் படுவதாகவும் இருக்கிறது என்று புக்கிட் காட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் நீதிக்கட்சியின் உதவித் தலைவருமான சம்சுல் இஸ்கண்டர் தெரிவித்தார். எஸ்பிஆர் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடைமுறை மீது நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் மாற்றுத் திட்டமாக ஆயிரக்கணக்கான வாக்காளர்களை ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக கூறினார்.

"   எஸ்பிஆர் நீதிமன்றம் செல்லும் வரை காத்திருக்க தேவையில்லை. மாறாக பொது மக்களின் அளவுக்கு அதிகமான ஆட்சேபனைகள் கிடைத்தது தொடர்பில் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தியிருக்க வேண்டும். ஆக, தற்போது மறுசீரமைப்பு முயற்சிகள் தோல்வி அடையும் தருவாயில், மாற்றுத் திட்டமாக ஆயிரக்கணக்கான வாக்காளர் பெருமக்களை தொகுதி மாற்றம் செய்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதனிடையே பல ஆட்சேபனைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், ஆயிரகணக்கான ஆட்சேபங்கள் எழுந்துள்ளதாகவும், அதிலும் காவல்துறையில் புகார்களும் செய்யப்பபட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.

shamsul-iskandar-mohd-akin

 

 

 

 

 

 

 

மலேசிய தேர்தல் ஆணையம் பொது மக்களுக்கு தகுந்த முறையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அம்னோ தேசிய முன்னணியை வெற்றி பெற செய்யும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா, தனது ஆணையம் பழைய தொகுதிகளின் அடிப்படையில் 14வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் கூறுகையில் அவர் சிலாங்கூர் மற்றும் மலாக்கா மறுசீரமைப்பு பரிந்துரையை எதிர்த்து நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் இந்த நடவடிக்கை சாத்தியமாகும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.