NATIONAL

ரமாடன் சந்தையில் இஸ்லாம் அல்லாத மக்கள் பிரதிநிதிகளை தடுப்பது விவேமற்றது

11 ஜூன் 2017, 5:46 AM
ரமாடன் சந்தையில் இஸ்லாம் அல்லாத மக்கள் பிரதிநிதிகளை  தடுப்பது விவேமற்றது

ஷா ஆலாம் - மலேசியர்கள் வெளிப்படையான மற்றும் விவேகமான சிந்தனையையும் செயல்பாட்டினை கொண்டிருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகிடின் யாசின் ரமாடான் சந்தையில் இஸ்லாம் அல்லாத மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும் என்றார்.அவர்களை தடுப்பது விவேகமற்றது என்றார்.

மக்கள் பிரதிநி தி எனும் ரீதியில் அவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மக்களை சந்திப்பதோடு மக்களுக்கும் அவர்களுக்குமிடையிலான உறவினை வலுப்படுத்தவும் ரமாடான் சந்தை பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.

குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லீயு சீன் தோங் மற்றும்  அவரை சார்ந்தவர்களும்  ரமாடான் சந்தையில் குர்மா பழம் விநியோகம் செய்தை சிலர் தடுத்தது குறித்து முகிடின் யாசின் இவ்வாறு கூறினார்.

குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாம் அல்லாதவராய் இருந்தாலும் அவரை ரமாடான் சந்தையில் நுழைய விடாமல் தடுத்ததும் அவரை மரியாதையற்ற சொல்லால் வசைப்பாடியது நன் சிந்தனையல்ல.அஃது இந்த புனிதமான ரமாடான் மாததிற்கு ஏற்புடையதுமில்லை என்றும் அவர் கருத்துரைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராய் மக்களோடு நெருங்கி பழகவும் அவர்களின் தேவையகளை அறிந்துக் கொள்ளவும் ரமாடான் சந்தை அதன் பங்களிப்பினை வழங்கிடும் நிலையில் அதனை தடுப்பது அறிவார்ந்த செயலாக இருக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினராய் மக்களை சந்திப்பது அவரது கடமை என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

மேலும்,புனிதமான ரமாடான் மாதத்தில் இஸ்லாமியர்கள் மற்றவர்களிடம் அதன் மாண்போடு நடந்துக் கொள்ள வேண்டும்.அதைவிடுத்து விவேகமற்ற நிலையில் செயல்படக்கூடாது என்றும் நினைவுறுத்தினார்.,

மலேசிய போன்ற பல்லினம் வாழும் நாட்டில் நாம் அனைவரும் ஒவ்வொருவரோடு நட்புறவு கொள்வதோடு புரிந்துணர்வோடும் கைகோர்த்தல் வேண்டும் என்றார்.நம்மிடையே மதம்,இனம் மற்றும் அரசியல் வேறுப்பாடும் தனித்தனியே ஆட்கொண்டிருந்தாலும் மலேசியர்கள் எனும் நிலையில் நாம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் இருத்தல் வேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளையில்,சக மனிதனை மதித்து நட்புறவு கொள்வதையே இஸ்லாம் வரவேற்ப்பதாக கூறிய அவர் நாம் அதனை தொடர்ந்து அமல்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.