NATIONAL

தடுப்புக் காவலில் மரணம், அதிகாரப்பூர்வ விசாரணை வேண்டும்

8 ஜூன் 2017, 7:54 AM
தடுப்புக் காவலில் மரணம், அதிகாரப்பூர்வ விசாரணை வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 8:

கடந்த பிப்ரவரி 7-இல் காவல்துறை தடுப்புக் காவலில் இறந்த பாலமுருகனின் மரணத்திற்கான காரணத்தை அறிய அதிகாரப்பூர்வ விசாரணை வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கோபிந் சிங் தெரிவித்தார். செக்சன் 334 மற்றும் 339 குற்றவியல் விதிகளின்படி விசாரணை நடத்தி மரணத்தின் காரணம் மற்றும் சம்பவம் நடந்த சூழ்நிலை அனைத்தும் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் சட்ட விதிகளின்படி தடுப்புக் காவல் மரணங்களின் மீது நடவடிக்கைகள் எடுத்து தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

"   பொது மக்கள் காவல்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த சட்டங்கள் மரணத்தின் மூல காரணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.

பாலமுருகன், 44 வயதில் கிள்ளான் மாவட்ட காவல்துறை தடுப்புக் காவலில் மூன்று நாட்கள் கழித்து இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது. கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை பிணக் கிடங்கில் பாலமுருகனின் பிரேதத்தை குடும்பத்தினர் அடையாளம் காணும் போது முகத்தில் பலத்த காயம் மற்றும் வீக்கம் இருந்ததாகக் கூறியதாக வழக்கறிஞர் நா. சுரேந்திரன் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.