SELANGOR

எம்பிஏஜே - நகரத்தை ஒன்றிணைந்து மேம்படுத்துவோம்

7 ஜூன் 2017, 3:53 AM
எம்பிஏஜே - நகரத்தை ஒன்றிணைந்து மேம்படுத்துவோம்
எம்பிஏஜே - நகரத்தை ஒன்றிணைந்து மேம்படுத்துவோம்

ஷா ஆலம், ஜூன் 7:

அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மாநில அரசாங்கத்தின் அணுகுமுறைகளின் அடிப்படையில் 'சிட்டிஸன் எங்கேஜ்மண்ட்' திட்டத்தை மக்களிடையே அறிமுகப்படுத்தி உள்ளது. எம்பிஏஜேவின் தலைவரான அப்துல் ஹமீத் ஹுசேன் கூறுகையில், இந்த புதிய அணுகுமுறை சமுதாய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி மக்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறது என்றார்.

"   நகராண்மை கழகத்தின் இந்த அணுகுமுறை மக்களோடு இணைந்து சைக்கிள் ஓட்டம், மாணவர்களோடு நிகழ்ச்சிகள், ஒருங்கிணைந்த துப்புரவு பணிகள், கலந்துரையாடல், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இது மட்டுமில்லாமல், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடியிருப்பில் வசிக்கும் மக்களின் சிக்கல்களை தீர்வு காண விளக்கக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது," என்று சிலாங்கூர் இன்று க்கு கூறினார்.

ydp-mpaj-abd-hamid-hussain

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதனிடையே, தற்போது நகராண்மை கழகத்தின் அணுகுமுறையின் அடிப்படையில் மக்களிடம் இருந்து நல்ல விதமான கருத்துகள் வருவதாகவும் இஃது எம்பிஏஜேவின் நகராட்சி நிர்வாகத்தை இன்னும் மேம்படுத்தும் என்று விவரித்தார்.

'சிட்டிஸன் எங்கேஜ்மண்ட்' திட்டம் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) உடன் இணைந்து நகர மற்றும் புறநகர் மக்களை சமூக நலத் திட்டங்களில் பங்கேற்க வழி வகுக்கும் என்றால்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.