SELANGOR

மந்திரி பெசார்: ஆலயம் உடைபடுவது நிறுத்தம், தகுந்த வழிமுறை தேடப்படும்

6 ஜூன் 2017, 7:58 AM
மந்திரி பெசார்: ஆலயம் உடைபடுவது நிறுத்தம், தகுந்த வழிமுறை தேடப்படும்

ஷா ஆலம், ஜூன் 6:

கடந்த சில நாட்களாக, யூஎஸ்ஜே 25, பூச்சோங்கில் அமைந்துள்ள சீபில்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் உடைபடும் என்ற நிலையில் இருப்பதாக அச்சம் நிலவி வந்தது அனைவரும் அறிந்ததே. இந்த ஆலயம் உடைப்பு நடவடிக்கை மேம்பாட்டாளரான ஒன் சிட்டி நிறுவனம் நீதிமன்ற ஆணையின் மூலம் ஆலயம் அமைந்துள்ள நிலத்தை எடுத்துக் கொண்டது. இந்த நீதி மன்ற நடவடிக்கையில் சில குளறுபடிகள் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

 

"   இதன் அடிப்படையில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்லஸ் சாந்தியாகோ, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கோபிந் சிங் மற்றும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ஆகியோருடன் கலந்து பேசி இருக்கிறேன். இந்திய சமுதாயம் இந்த ஆலயத்தின் மீது கொண்ட அக்கறை மற்றும் சரித்திரம் வாய்ந்த ஒரு ஆலயமாக இருந்து வருவதால், நான் மேம்பாட்டாளரிடம் பேசி ஆலயம் உடைபடும் நடவடிக்கையை நிறுத்திக் வைத்திருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

மேலும் நல்ல பலனை தரும் ஒரு முடிவு எடுக்க சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரையும் சந்திக்க ஏற்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் எடுக்கப்படும் என்று விவரித்தார்.

நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மாநில அரசாங்கம் தலையிட வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.  யூஎஸ்ஜே 25, பூச்சோங்கில் அமைந்துள்ள சீபில்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் சுற்று வட்டார மக்கள் இறை வழிபாட்டு தளமாகவும் மிகப் பழமைவாய்ந்த அரச மரம் புனிதமாக கருதப் படுகிறது. இந்து பெருமக்கள் இந்த ஆலயத்தை 1891-இல் இருந்து வழிபட்டு வருகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.