NATIONAL

தனியார் ஊழியர்களின் நலத்தை உதாசீனப்படுத்த வேண்டாம்

6 ஜூன் 2017, 2:01 AM
தனியார் ஊழியர்களின் நலத்தை உதாசீனப்படுத்த வேண்டாம்
தனியார் ஊழியர்களின் நலத்தை உதாசீனப்படுத்த வேண்டாம்

ஷா ஆலம், ஜூன் 6:

மத்திய அரசாங்கம் முதலாளி மற்றும் தனியார் ஊழியர்கள் விடயத்தில் நீதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து ஊக்குவிப்பு கொடுத்து தொழிற்சங்கங்கள் அமைக்க வழி வகை செய்ய வேண்டும் மக்கள் நீதி கட்சியின் தொழிலாளர் நலப்பிரிவு தலைவர் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீத் கூறினார். மத்திய அரசாங்கம் பொதுச் சேவை ஊழியர்களின் முதலாளி என்றாலும் பொதுச் சேவை ஆணையத்தோடு பிரிந்து செயல்படுவதாக கூறினார்.

மத்திய அரசாங்கம், முதலாளிகள் குழு (பொதுச் சேவை ஆணையம்) மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக ஒரு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் என்றார். அரசாங்கம் எல்லா தரப்பினரையும் கருத்தில் கொண்டு தொழிலாளர் அடிப்படை சம்பளம், தொழிலாளர் நலன் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாடு ஆகியவற்றில் அக்கறை செலுத்த வேண்டும். சமுதாயத்தின் ஈடுபாடு, தொழிலாளர் சமூக நலன் கோரிக்கை மற்றும் பங்களிப்பு மிக முக்கியம் என்று கூறினார்.

abdullah sani

 

 

 

 

 

மேலும் அப்துல்லா சானி கூறுகையில் மனிதவள அமைச்சினால், தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர் நலன் மலேசியாவில் புறக்கணிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மனிதவள அமைச்சு தனியார் நிறுவனங்களில் பணி பணிபுரிபவர்களின் மேல் எந்த கருணையும் காட்டுவதில்லை. அடிப்படை சம்பளம் ரிம 1000 இன்றைய சூழ்நிலையில் நகரவாசிகள் வாழ்க்கை வாழ முடியாது என்றார்.

"   அரசாங்கம் தொடர்ந்து அந்நிய நாட்டு தொழிலாளர்களை பெரிய அளவில் இறக்கிக் கொண்டே போகிற நிலையில் சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. கல்வி திட்டம் ஒவ்வொரு முறையும் அமைச்சர் மாறும் போது மாற்றப்படுவதால் மோசமான விமர்சனத்துக்கு ஆளாகிறது. அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் வரி விதிப்பு நடைமுறை மக்களை பெரும் சுமைகளை எதிர் நோக்க நேரிடும்," என்று கூறினார்.

தொழிலாளர்களில் எட்டு சதவீதமே தொழிற்சங்கங்களில் பங்கு வகிப்பதாகவும் இதனால் தொழிலாளர் நலன் மலேசியாவில் புறக்கணிக்க படுவதாக கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.