NATIONAL

இளைஞர்களை கவர்வதற்கு "தாவாரான்" ஹராப்பான் கூட்டணி தகவல்

5 ஜூன் 2017, 3:16 AM
இளைஞர்களை கவர்வதற்கு "தாவாரான்" ஹராப்பான் கூட்டணி தகவல்

ஷா ஆலாம் - அம்னோ தேசிய முன்னணியின் தேசிய உருமாற்றம் 50 எனும் மாயையை உடைத்தெறிய ஹராப்பான் கூட்டணி இளம் தலைமுறைக்கு வாய்ப்பு என சொல்லப்படும் "தாவாரான்" திட்டத்தை முன் மொழிந்துள்ளது.

இத்திட்டத்தினை தேர்தல் கொள்கை அறிக்கையாக கொண்டு வருவதன் மூலம் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர்களுக்கான வாய்ப்பில் பெரும் நம்பிக்கையினை பெறலாம் என கெஅடிலான் இளைஞர் அமைப்புத் தலைவர் நிக் நஸ்மின் நிக் அமாட் கூறினார்.

நாட்டின் 14வது பொது தேர்தல் கொள்கை அறிக்கையில் இதனை முன் வைப்பதன் மூலம் அம்னோ தேசிய முன்னணியின் தேசிய உருமாற்றம் 50ஐ உடைத்தெறிய முடியும் என்றும் நினைவுறுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ் இலவச கல்வி,இளம் தலைமுறைக்கான வீடமைப்புத் திட்டம்,சொந்த வீடு உட்பட இளம் தலைமுறையின் பெரும் எதிர்பார்ப்புகளை அதில் உள்ளடக்குவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.இளம் தலைமுறையினர் அம்னோ தேசிய முன்னணியின் அறிவிப்பால் கனவுலகில் மட்டுமே வாழ முடியும்.ஆனால்,நாம் அதனை நினைவாக்கும் ஆற்றல் அறிவார்ந்த சிந்தனையை முன் வைக்கிறோம் என்றார்.

அம்னோவின் தேசிய உருமாற்று திட்டம் 2050இல் தான் சாத்தியமாகும்.ஆனால்,நமது திட்டம் இவ்வாண்டு அல்லது அடுத்தாண்டில் நிறைவேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்த நிக் நஸ்மின் இல்லாத ஒன்றுக்காக 2050வரை காத்திருப்பதை காட்டிலும் இளம் தலைமுறையின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் "தாவாரான்"திட்டத்திற்கு இளம் தலைமுறையின் ஆதரவும் பெரிதும் இருக்கும் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அம்னோ தேசிய முன்னணியின் 2020 தூரநோக்கு திட்டம் சரியான இலக்கை எட்டாததை சுட்டிக்காண்பித்த அவர்  அதன் பின்னர் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டிஎன் 50யும் நிச்சயம் அதன் இலக்கை அடையாது என்றார்.ஆனால்,ஹராப்பான் கூட்டணி இளம் தலைமுறையினரை கனவு உலகத்திற்கு இட்டுச்செல்லாமல் நடப்பில் அதனை அமல்படுத்த முன் வந்துள்ளோம் என்றார்.

நாட்டின் 14வது பொது தேர்தலில் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டால் இஃது பெரும் சாத்தியம் என்றும் அவர் நம்பிக்கையோடு கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.