SELANGOR

சாலை நெரிசலை தவிர்க்க பண்டான் ஜெயாவில் ஒருவழி பாதை

5 ஜூன் 2017, 1:17 AM
சாலை நெரிசலை தவிர்க்க பண்டான் ஜெயாவில் ஒருவழி பாதை
சாலை நெரிசலை தவிர்க்க பண்டான் ஜெயாவில் ஒருவழி பாதை

ஷா ஆலாம் - பண்டான் ஜெயாவில் நெரிசலை தவிர்க்க பொது மக்கள் முன் வைத்த ஒரு வழி பாதை ஆலோசனையை அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம் ஆலோசித்து வருகிறது.

பெரும் நெரிசலை ஏற்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தி வரும் பெர்சியாரன் பண்டான் 7,பெர்சியாரான் பண்டான் 8 மற்றும் பெர்சியாரான் பண்டான் 9 ஆகிய பகுதிகளில் ஒரு வழி பாதை திட்டத்தை அமல்படுத்துவது குறித்தி துள்ளியமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீடமைப்பு மற்றும் நகர்புற மேம்பாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் அப்துல் சமாட் குறிப்பிட்டார்.

மேலும்,போதுமான கார் நிறுத்தம் இல்லாத சூழலில் சாலையின் இரு பகுதிகளிலும் நிறுத்தப்படும் கார்களால் சாலை நெரிசல் ஏர்படுவதையும் சுட்டிக்காண்பித்த அவர் இதனை களையவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இப்பிரச்னைகளை களைய ஒரு வழி பாதை பெரும் பங்காற்றும் என நம்பப்படும் வேளையில் அதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையின் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.ஒரு வழி பாதை இப்பிரச்னைக்கு நன் தீர்வினை ஏற்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

2017-06-05-PHOTO-00000037ஒவ்வொரு நாளும் சாலையின் ஒரு மாங்கிலும் கார்களை நிறுத்துபவர்களுக்கு சம்மன்களை கொடுப்பதை காட்டிலும் மக்களை இப்பிரச்னையிலிருந்து விடுவிப்பதையே இலக்காக கொண்டு அம்பாங்  ஜெயா நகராண்மைக்கழகம்  செயல்படுவதாகவும் செம்பாக்கா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

பொது மக்களின் செயல்பாடுகளுக்கு சம்மன் வழங்கப்பட்டாலும் இப்பகுதியில் போதுமான கார் நிறுத்தம் இல்லாததை ஒப்புக் கொள்ளதான் வேண்டும் என்றார்.இதற்கு நன் தீர்வினை ஏற்படுத்த முனைவது விவேகமானதாய் இருக்கும் பட்சத்தில் நடப்பில் ஒரு வழி பாதை திட்டம் நன் தீர்வாகும் என்றார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.