TOURISM

ஏர்ஆசியா மூன்று மில்லியன் இலவச இருக்கைகள் தர இருக்கிறது

4 ஜூன் 2017, 2:19 AM
ஏர்ஆசியா மூன்று மில்லியன் இலவச இருக்கைகள் தர இருக்கிறது

கோலாலம்பூர், ஜூன் 4:

மலிவு விலை பயண நிறுவனமான, இந்தியா தற்போது மூன்று மில்லியன் இலவச பயண டிக்கெட்களை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த இலவச பயணங்கள் எதிர் வரும் 2018-இல் ஜனவரி 15 இருந்து ஆகஸ்ட் 28 வரை திட்டமிடப்பட்ட வகையில் இருக்கும் கூறியுள்ளது. இலவச இருக்கைகளுக்கான பதிவு ஜூன் 4 தொடங்கி ஜூன் 11, 2017 வரை நீடிக்கும் என்றும் இதற்கு எந்த ஒரு கட்டணமும் பயணிகளுக்கு விதிக்கப்படாது. இலவச பயணங்கள் கோலாலம்பூர் இருந்து ஜோகூர் பாரு, பினாங்கு மற்றும் சூராட் தானி, பினாங்கில் இருந்து லங்காவி மற்றும் சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பாருவில் இருந்து கோலா திரெங்கானுவிற்கும் ஏர்ஆசியா பறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்ஆசியா குழுமத்தின் வாணிப தலைமை அதிகாரி, சிஃக்ட்ரவுன் தே கூறுகையில் இலவச இருக்கைகள் வழங்குவதை பொது மக்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்த ஆண்டிற்கான விடுமுறையை அமைத்துக் கொள்ளலாம் என்று விவரித்தார்.

ஏர்ஆசியா எக்ஸ் பயன்படுத்தும் பயணிகள் குறைந்த கட்டணமான ரிம199-ஐ கோலாலம்பூரில் இருந்து பேர்த் மற்றும் சோண்கிங் ஆகிய இடங்களுக்கு செல்லலாம். மேலும் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்,ஷாங்காய்,ஓசாகா, பூசான், ஆக்லாந்து, கோல்ட் கோஸ்ட் மற்றும் மற்ற இடங்களுக்கு ரிம 899 விலையில் பறக்கலாம் என்று கூறினார். இதில் " தெ பிரிமியம் ஃபிலட்பெட்" மற்றும் "பிரிமியம் ஃபிலஸ்" இலவச பயண காப்புறுதி சேவையை மலேசியாவில் இருந்து தாய்லாந்து செல்லும் பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

பிக் ஏர்ஆசியா முன்பண அட்டை வைத்திருக்கும் பயணிகள் நேரிடையாக airasia.com, AirAsiaGo மற்றும் AirAsia Expedia போன்ற இணைய தளங்களில் பதிவு செய்யலாம். சிட்டி பேங்க் வங்கி கணக்கு வைத்துள்ள பயணிகள் முதல் 100 பேர் ரிம 50 பெறுமானமுள்ள மின்சார பொருட்கள் கூப்பன்களை பெற்றுக் கொள்ளலாம்.

SUMBER: BERNAMA

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.